ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

கோவையில் ஸ்டூடியோவில் பட்டு சேலை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது !!!

SHARE

 கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஸ்டூடியோவில் பட்டு சேலை, குத்துவிளக்கு திருடிய வாலிபர் கைது !!!

கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் ஜாய்  செல்வா. இவர் பாரதி பார்க் 8 வது கிராஸில் ஸ்டுடியோ வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரது ஸ்டுடியோவில் சுத்தம் செய்யும் பணி நடந்தது. 

இதற்காக அங்கு இருந்த 4 பட்டு சேலைகள் மற்றும் வெண்கல குத்து விளக்கு ஆகியவற்றை ஸ்டூடியோ விற்கு வெளியே வைத்து விட்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு இருந்து பட்டு சேலைகள் மற்றும் வெண்கல குத்து விளக்கை ஒரு வாலிபர் திருடி விட்டு அங்கு இருந்து தப்ப முயன்றார். 

உடனே ஜாய்  செல்வா மற்றும்அங்கு இருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கி சாய்பாபா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் அவர் பொன்னையா ராஜபுரத்தைச் சேர்ந்த நிஷாந்த் ( வயது 20) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: