புதன், 18 பிப்ரவரி, 2026

தமிழக இடைக்கால பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் ....

SHARE

 தமிழக இடைக்கால பட்ஜெட்: அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் ...


தமிழக அரசின் பட்ஜெட் குறித்து அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வரவேற்​றும், விமர்​சித்​தும் கருத்​துக்​களை தெரி​வித்​து உள்​ளனர். இது தொடர்​பாக அரசி​யல் கட்சி தலை​வர்​கள் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​களில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் மு.க.ஸ்​டா​லின்: இயற்கை வேளாண்​மைக்கு முக்​கி​யத்​து​வம் தொடங்​கி, வேளாண்​மை​யில் அறி​வியலைப் பயன்​படுத்​து​வது வரையி​லான நம்​முடைய முன்​னெடுப்​பு​களால், உழவர் வாழ்​வில் உதய சூரிய​னின் ஒளி பரவு​கிறது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: தமி​ழின தொன்​மையை விளக்​கும் அருங்​காட்​சி​யகங்​கள் முதல் நவீன உலகுக்​கான செயற்கை நுண்​ணறிவு அறி​வு​சார் பொருளா​தார வளர்ச்சி வரை அனைத்​தி​லும் கவனம் செலுத்தி உள்ள திரா​விட மாடல் பட்​ஜெட்.

ம.தி​.முக பொதுச் செய​லா​ளர் வைகோ: தமி​ழ​கத்​தின் வளர்ச்​சி​யில் எவரை​யும் பின்​தங்கி விட அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​யுள்​ளதை செயல்​படுத்​தும் வகை​யில் இடைக்​கால நிதி நிலை அறிக்கை வரவேற்​கத்​தக்​க​தாக இருப்​பது பாராட்​டத்​தக்​கது.

திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி: மாநில மொத்த உள்​நாட்டு உற்​பத்​தி​யில் நிதிப் பற்​றாக்​குறையை 3 சதவீத​மாக கட்​டுப்​படுத்​தி​யுள்​ளது பாராட்​டுக்​குரியது. மத்​திய அரசின் கொள்​கை​களால் வேளாண் துறை பல்​வேறு சவால்​களைச் சந்​தித்து வரும் வேளை​யில், தமிழக விவ​சா​யிகளுக்​குப் பாது​காப்பு அரணாகத் திகழ்​கிறது இந்த பட்​ஜெட்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்டியன்: மகளிர் உரிமைத் தொகை உள்​ளிட்ட பெண்​கள், மாண​வர்​கள் மற்​றும் விவ​சா​யிகளுக்​கான நேரடி நிதி உதவித் திட்​டங்​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​பட்​டிருப்​பது பாராட்​டுக்​குரியது. கடும் நிதிச் சுமை​களுக்கு இடையே சாமானிய மக்​களின் நலனைப் பாது​காக்​கும் வகை​யில் இந்த அறிக்​கையை மாநில அரசு வழங்​கி​யுள்​ளது.

விமர்சனங்கள்

மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன்: வரும் மார்ச் 31, 2027-க்​குள் தமி​ழ​கத்​தின் மொத்​தக் கடன் ரூ.10,62,248 கோடி​யாக உயரும் என பட்​ஜெட்​டில் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வளர்ச்​சிப் பணி​கள் முடங்​கிக் கிடக்​கும் நிலை​யில், இந்த நிதி எங்கே சென்​றது? தமி​ழ​கத்தை ஒரு தீராத கடன் படு​குழி​யில் தள்​ளியதே இந்த அரசின் வரலாற்​றுச் சாதனை.

பா.ஜ.க மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: இது தமிழக அரசின் இடைக்​கால பட்​ஜெட் அல்ல. வெற்​றுப் பெருமை பத்​திரம். ஐந்​தாண்​டு​களாக ஏமாற்​றத்​துக்​குப் பழகிய மக்​களுக்கு இந்த ஏமாற்​ற​மும் புதி​தில்​லை. மாற்​ற​மும் தொலை​விலில்​லை.





SHARE

Author: verified_user

0 கருத்துகள்: