நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி; விஜய் அரசியல் விமர்சனம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் 'ரூ.10,000 வாக்குறுதி' குறித்து அண்ணாமலை விரிவான பேட்டி !!!
கோவை, காளப்பட்டியில் தெருமுனைப் பிரச்சாரத்திற்கு பின்னர் பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது
தெருமுனைப் பிரச்சார கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடத்தப்பட்டு உள்ளது எனவும், தமிழகம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்று நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரும் பொழுது ஒரு கூட்டணி கட்சியினர் இடையே இணைப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் , தி.மு.க வின் குறைகளை மக்களிடம் சொல்வதற்காகவும் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானது குறித்து பேசிய அவர், பொது வாழ்க்கை வரலாற்றில் இன்று துக்க நாள், உடல்நிலை சரியில்லாமல் போராடிக் கொண்டிருந்த அய்யா நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார், ஒரு அரசியல் தலைவருக்கான முழு இலக்கணத்துடன் இருப்பவர் அவர்,ஒரே ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என தெரிவித்தார்.அப்போது வெற்றி பெற்ற சி.பி் ராதாகிருஷ்ணன் , நான் ஜெயித்து இருந்தாலும் கூட இன்று வேதனைப்படுகிறேன்,
என்னுடைய வெற்றியை என்னால் கொண்டாட வில்லை என புகழாரமாக தெரிவித்தார். மேலும் கூறிய அவர், சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தது இல்லை எனவும்,
சுதந்திரப் போராட்ட உறுப்பினராக, மணல் கொள்ளைக்கு எதிராக போராடியவர், மக்களின் அன்பை பெற்றவர் எனவும் தெரிவித்தார்.
அரசியல் இலக்கணமாக இருந்தவர், அவருக்கு மரியாதை கலந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனவும், அவர் அரசியல் , வாழ்ந்த விதம் எங்களை போன்ற மனிதர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் அவர் வழியில் பயணிக்க உந்து சக்தியாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
கூட்டணி இடப்பங்கீடு குறித்து தலைவர்கள் பார்த்து கொள்வார்கள் எனவும், வரும் 26, 27 தேதிகளில் பியூஸ் கோயல் வர இருக்கிறார், இடங்கள் குறித்து பேசுவது எல்லாம் அவர்கள் இலாகா எனவும் அவர்கள் கூட்டணி குறித்து பேசி சரியாக முடிவு எடுப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இருந்து வருகின்றார்கள், போகின்றார்கள் .
எங்களுக்கு அதிகாரம் வேண்டும் தமிழகத்தில் வேண்டாம் என்கிறார்கள் என தெரிவித்த அவர்
ஆனால் நாங்கள் அப்படியல்ல, நேர் கோட்டில் பயணித்துக் கொண்டு இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கூட்டணியில் ஒற்றுமை இல்லை என திருமாவளவன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு,
தி.மு.க கூட்டணியில் திருமாவளவனுக்கு ஒரு சீட் குறைக்க போகிறார்கள். ஆறு சீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு சீட் குறைத்து ஐந்து சீட் ஆக்கப் போகிறார்கள். அவரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேற போகிறார் என தெரிவித்தார்.
தே.மு.தி.க வந்து இருப்பதால் எல்லா கூட்டணி கட்சியினருக்கும் ஒரு சீட்டு குறைக்க போகின்றனர் என தெரிவித்த அவர்
திருமாவளவன் சந்தோஷமாக இல்லை, என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் யாரும் சந்தோஷமாக இல்லை என சொல்வது சந்தர்ப்பவாதம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
விஜயை பொறுத்த வரை, தமிழக மக்கள் தெளிவாக இருக்கின்றனர். யார் வர வேண்டும் என முடிவு செய்வார்கள். தே.ஜ.கூட்டணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.
மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர்கள். 2026 ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போட போகிறார்கள் என தெரிவித்தார்.
விஜயை திட்டுவது தமிழ்நாட்டு மக்களை திட்டுவதாக அவர் நினைத்துக் கொள்கிறார்கள் என தெரிவித்த அவர்,
அரசியலில் விமர்சனம் எல்லார் மீதும் தான் வைக்கப்படும் என தெரிவித்தார்.
நம் மீது விமர்சனம் வைப்பது தமிழ்நாடு மக்களின் மீது வைக்கும் விமர்சனம் என அரசியல்வாதிகள் சொல்லக் கூடாது எனவும் தெரிவித்தார்.
தே.ஜ. கூட்டணிக்கு
எல்லோரும் வருவார்கள் என டி.டி.வி பேசி இருக்கிறார்,
ஓ.பி.எஸ் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்த அவர்,
ஓ.பி.எஸ் விவகாரத்துக்குள் போக விரும்பவில்லை என தெரிவித்தார்.
எல்லாருக்கும் ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் தான் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பலமுறை முதல்வராக ஓ.பி.எஸ் அவர்களை ஜெயலலிதா கொண்டு வந்து இருக்கிறார் எனவும், ஓ.பி.எஸ் அவர்களை பொறுத்த வரை ஜெயலலிதாவின் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கின்றார், ஒற்றைக் கோட்டில் இருக்கும் பொழுது, ஓ.பி.எஸ்-க்கு பிரச்சனை இருக்காது எனவும் தெரிவித்தார்.
சசிகலா கட்சி ஆரம்பித்து இருக்கிறார் இன்னும் காலம் இருக்கிறது பார்க்கலாம் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்து இருக்கிறது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒருமுறை பத்தாயிரம் ஒரு குடும்பத்திற்கு வழங்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி சொல்லி இருப்பது தவறானது அல்ல, அது
மக்களுக்கு பயன்படும் என தெரிவித்தார்.
ஐந்து ஆண்டுகளில் மக்கள் துன்பத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்,
நிச்சயமாக தாய்மார்கள் இதற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் கடன் சுமை இருக்கின்றது, பேலன்ஸ் பட்ஜெட் கொண்டு வர வேண்டும் என தெரிவித்த அவர்,
தி.மு.க ஆட்சி இந்த பட்ஜெட்டில் 3 லட்சத்தி முப்பதாயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்க வேண்டும் .
ஆனால் 27 ஆயிரம் கோடி குறைவாக 3 லட்சத்து 3 ஆயிரம் கோடி தான் எடுத்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
தமிழகத்தில் கனிமவளத் துறை வெறும் 100 கோடி மட்டும் தான் வருமானம் ஏன்பது நம்ப முடியாதது எனவும், வருவாயை சரி செய்யும் பொழுது பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார். கனிமவளத் துறையில் இருந்து நிறைய பணம் எடுக்க வேண்டும் கடன் சுமையை சரி செய்ய முடியும் இது ஆரோக்கியமான அரசியல் எனவும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


0 கருத்துகள்: