டெல்லி பாரத மண்டபத்தில் ஐந்து நாள்களாக நடைபெற்று வந்த சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாடு நிறைவு அடைந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி கடந்த இரண்டு நாள்களாக இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டார்.
இலங்கை அதிபர். அநுரகுமார திசநாயக, ஸ்லோவேகியா அதிபர் பீட்டர் பெல்லேகிரினி, லிச்டென்ஸ்டைன் பட்டத்து இளவரசர் அலாய்ஸ், மோரீஷஸ் அதிபர் நவீன்சந்திர ராமகூலம் ஆகியோரை பிரதமர் தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.
இலங்கை அதிபர் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர், இலங்கை அதிபர் திசநாயக உடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இருநாட்டு உறவில் சமீப காலங்களில் ஏற்பட்டு உள்ள முன்னேற்றம் குறித்து விவாதித்தோம். மதிப்புமிக்க அண்டை நாடு என்ற முறையில் இலங்கையுடன் நட்புறவு வலுப்படுத்தப்படுகிறது. எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன்மேம்பாடு, கலாசாரம், நீலப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்றார்.
இதேபோல், ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ஐ.நா. சீா்திருத்தங்கள், அனைவரையும் உள்ளடக்கிய ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.
புத்தாக்க நிறுவனங்களுடன் ஆலோசனை ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டின் நிறைவு நாளில் ஏ.ஐ. மற்றும் பிற அதிநவீன தொழில் நுட்பங்கள் சாா்ந்த 16 புத்தாக்க நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி வட்டமேஜை ஆலோசனையில் ஈடுபட்டார்.
இது தொடா்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உன் கூறி இருப்பது :
விவசாயம், கல்வி, சுற்றுச்சூழல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.ஐ. திறனைப் பயன்படுத்துவது குறித்து 16 துறைசார் புத்தாக்க நிறுவனங்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார்.
இந்திய புத்தாக்க நிறுவனங்கள் மீதான சர்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கையைக் குறிப்பிட்ட பிரதமர், வலுவான தரவு பாதுகாப்பு, தவறான தகவல்களுக்கு எதிரான விழிப்புணர்வு, நாட்டின் முன்னேற்றத்துக்குத் தேவையான தீர்வுகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.
இந்திய மொழிகளைப் பிரபலப்படுத்த...: பயிா் சாகுபடி ஊக்குவிப்பு, பருவநிலை மாற்ற அபாயங்களின் மேலாண்மை, மண் வளத்தை பாதிக்காத வகையிலான உரப் பயன்பாடு உள்ளிட்ட வேளாண் நடைமுறைகளிலும், தாய்மொழி வாயிலான உயர்க்கல்வியை ஊக்குவிப்பதிலும், இந்திய மொழிகள், கலாசாரம், உள்நாட்டு தயாரிப்புகளைப் பிரபலப்படுத்துவதிலும் ஏ.ஐ. பயன்பாட்டை விரிவாக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாட்டில் தற்போது ஏ.ஐ. மேம்பாட்டுக்கு உகந்த, துடிப்பான சூழல் நிலவுவதாக புத்தாக்க நிறுவன தலைமைச் செயல் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இணையப் பாதுகாப்பு, ஏ.ஐ. நெறிமுறைகள், விண்வெளி, சமூக அதிகாரம் அளித்தல், சட்ட நடைமுறைகள் நவீனமயமாக்கம் உள்ளிட்ட துறைகள் சார்ந்து பணியாற்றும் ஏபிரிட்ஜ், அதாலத் ஏ.ஐ., பிரெயின்சைட் ஏ.ஐ., மிகோ, ஆரிஜின், சூப்பர்நோவா உள்ளிட்ட புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்றன.
பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர், ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்: