அ.தி.மு.க வின் 'தூண்கள்' சரிவு: செங்கோட்டையன், ஓ.பி.எஸ் இல்லாத வெற்றிடம் - தி.மு.க வின் அரசியலில் புதிய திருப்பம் !!!
எம்.ஜி.ஆர் காலம் முதல் ஜெயலலிதாவின் நம்பிக்கை வரை; விசுவாசிகள் வெளியேற்றத்தால் அ.தி.மு.க எதிர்கொள்ளும் சவால்கள் !!!
தமிழக அரசியலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க) ஒரு மிக முக்கியமான கால கட்டத்தைக் கடந்து கொண்டு இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரு பெரும் நிழல்களாகவும், கட்சியின் அசைக்க முடியாத தூண்களாகவும் கருதப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் அ.தி.மு.க இன்று இழந்து இருக்கும் நிலையில், இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கி தி.மு.க தனது அரசியல் காய் நகர்த்தல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த அரசியல் மாற்றத்தின் ஆழமான பின்னணி :
1. கே.ஏ. செங்கோட்டையன்: கட்சியின் 'அமைப்பு' நாயகன்
எம்.ஜி.ஆரால் அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்ட செங்கோட்டையன், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கியவர்.
விசுவாசம்:
தேர்தல் வியூகங்கள், பிரசாரப் பயணங்கள் மற்றும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைப்பதில் இவரை மிஞ்ச ஆள் இல்லை.
இழப்பு:
கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியின் அசைக்க முடியாத சக்தியாக விளங்கும் இவரை அ.தி.மு.க ஓரங்கட்டி இருப்பது, கட்சியின் அமைப்பு ரீதியிலான பலத்தை மேற்கு மண்டலத்தில் கேள்விக்குறியாக்கி உள்ளது.
2. ஓ. பன்னீர்செல்வம்:
ஜெயலலிதாவின் 'சாய்ஸ்' நெருக்கடியான காலங்களில் ஜெயலலிதாவால் இரண்டு முறை முதல்வர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டவர்.
நம்பிக்கை:
"விசுவாசத்திற்கு மறுபெயர் ஓ.பி.எஸ்" என்று சொல்லும் அளவுக்கு ஜெயலலிதாவின் முழு நம்பிக்கையைப் பெற்றவர்.
வீழ்ச்சி:
சசிகலாவுக்கு எதிரான 'தர்ம யுத்தம்', பின்னர் இ.பி.எஸ்-உடன் இணைந்த ஒருங்கிணைப்பாளர் பதவி எனப் பல திருப்பங்களுக்குப் பிறகு, தற்போது கட்சியில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் அ.தி.மு.க வின் வாக்கு வங்கியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
3. இ.பி.எஸ்-இன் ஒற்றைத் தலைமை & தி.மு.கவின் வியூகம்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, தினகரன், ஓ.பி.எஸ் என வரிசையாகப் பல சவால்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது கட்சியின் 'ஒற்றைத் தலைமை'யாக உருவெடுத்து உள்ளார்.
சவால்கள்:
செங்கோட்டையன் போன்ற சீனியர்களின் வழிகாட்டுதல் இல்லாததும், ஓ.பி.எஸ்-ன் வெளியேற்றமும் கட்சியில் ஒருவிதத் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க வில் நிலவும் இந்த அதிகாரப் போட்டியைப் பயன்படுத்தி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஈர்க்க தி.மு.க ஆட்டத்தை தொடங்கி உள்ளது.
ஜெயலலிதா கட்டிக்காத்த 'விசுவாசிகள் ராணுவம்' சிதறிக்கிடப்பது, 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விசுவாசத்தை விட அதிகாரமே பிரதானம் என்ற தற்போதைய சூழல், தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி உள்ளது.

0 கருத்துகள்: