ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரும் சரணடைய உத்தரவு !!!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேரின் ஜாமீன் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024 - ல், அவரது வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் பிரபல ரௌடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன், அஞ்சலை உள்பட 12 பேர் முக்கிய குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையில், அவர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தது.
இதனை அடுத்து, 12 பேருக்கும் வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மனு தாக்கல் செய்து இருந்தாா். அந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 12 பேரின் பிணை உத்தரவையும் ரத்து செய்ததுடன் அவர்கள் அனைவரும் சரணடைய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

0 கருத்துகள்: