இஸ்ரேல் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதற்கட்ட தாக்குதல்...
இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய பகுதிகளைக் குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வான் வழித் தாக்குதல்களை நடத்தி உள்ளன. இந்தத் தாக்குதலால், இஸ்ரேன் மற்றும் ஈரானின் வான் வழிப் பாதைகளை மூடப்பட்டு உள்ளன.
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேல் மீது ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் முதல் அலையான தாக்குதல்களைத் தொடங்கி உள்ளதாக, ஈரானின் துணை ராணுவப் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.
ஏற்கெனவே, ஈரானின் பதில் தாக்குதலை எதிர்பார்த்து இஸ்ரேல் முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டு, அபயா ஒலிகள் எழுப்பப்பட்டன. இதனால், ஈரான் ஏவிய ஏவுகணைகளால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
முன்னதாக, ஓராண்டுக்குள் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மீண்டும் மோதல்கள் வெடித்து உள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: