கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வழக்கில் இறுதி கட்ட வாதம் - விரைவில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படுகிறது !!!
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நேற்று இறுதிக்கட்ட வாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
கோவை விமான நிலையம் அருகே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்த கல்லூரி மாணவி அங்கு வந்த மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். மூன்று பேரும் அரிவாளை காட்டி மிரட்டி கல்லூரி மாணவியையும், ஆண் நண்பரையும் தாக்கி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
பீளமேடு போலீசா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய, நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கருப்புசாமி, அவருடைய தம்பி காலீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி, அவருடைய ஆண் நண்பர் உறவினர்கள் விசாரணை அதிகாரி என 112 சாட்சிகள் சேர்க்கப்பட்டனர். 72 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இந்த வழக்கில் இறுதி கட்ட வாதம் நேற்று தொடங்கியது. இதை ஒட்டி கருப்பசாமி, காளீஸ்வரன், தவசியம் மூன்று பேரும் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். துப்பாக்கி குண்டு பாய்ந்த காளீஸ்வரன் காலில் புண் ஆறாததால் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஊன்றுகோல் உதவியுடன் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார். தவசிக்கும் குண்டு பாய்ந்து பாதிப்பு இருந்ததால் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். நீதிபதி சுந்தரராஜன் குற்றச்சாட்டுகள் குறித்து மூன்று பேரிடமும் கேள்வி எழுப்பினார். குற்ற சம்பவங்கள் சேகரிக்கப்பட்ட தடயங்கள், குற்றப்பத்திரிகை, சாட்சிகள் அளித்த விவரங்கள் குறித்து நீதிபதி அவர்களிடம் கேள்வி எழுப்பினார். 1 1/2 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம் நடைபெற்றது. அரசு தரப்பு வழக்கறிஞர் ஜிஷா ஆஜராகி மூன்று பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கூறினார். இந்த வாதம் மூன்று மணி நேரம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 27 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார். எதிர் தரப்பு வழக்கறிஞர் வாதம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: