பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை குத்தி கொன்ற வாலிபர் விஷம் குடித்து விட்டு போலீசில் சரண் - விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு !!!
பொள்ளாச்சி அருகே சிறுமி மூதாட்டியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் விஷம் குடித்து விட்டு காவல்துறையிடம் சரண் அடைந்தார். அவர் விசாரணையின் போது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்து உள்ள நெகமம் அருகே கொண்டே கவுண்டம் பாளையத்தை சேர்ந்தவர் பூபதி, இவருடைய மனைவி கலையரசி, இவர்களுக்கு ஹரிதா , கௌசி என்ற மகள்கள் இருந்தனர். அவர்களுடன் பூபதியின் தாய் மயிலாத்தாளும் வசித்து வந்தார். ஹரிதா ஒரு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கௌசி பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பள்ளியில் படித்த போது கப்பளாங்கரையைச் சேர்ந்த அபிஷேக் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் அபிஷேக்கிடம் சகஜமாக பேசி வந்தார். ஆனால் அபிஷேக், கவுசியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அவர் கௌசி வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை, இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அபிஷேக் கௌசி வீட்டுக்கு சென்றார். அங்கு கௌசியை தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து சாரா மாறியாக குத்தினார். அவருடைய சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வெளியே வந்த பாட்டி மயிலாத்தாள் அக்காள் ஹரிதா ஆகியோரையும் அபிஷேக் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் கவுசி, மயிலாத்தாள் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து நெகமம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை தேடி வந்தனர்.
இந்நிலையில் அபிஷேக் விஷம் குடித்து விட்டு நேற்று முன்தினம் இரவு 12:30 மணி அளவில் நெகமம் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையின் போது தான் விஷம் குடித்ததாக போலீசாரிடம் கூறினார். முதலில் போலீசார் அதை நம்பவில்லை, சிறிது நேரத்தில் திடீரென அபிஷேக் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்தார். அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையிடம் அபிஷேக் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறும் போது :
தான் கடந்த மூன்று ஆண்டுகளாக கவுசியை ஒருதலைபட்சமாக காதலித்து வருவதாகவும், அவரும் அவரிடம் நன்றாக பேசுவார். இதனால் அவர் அவரை காதலிப்பதாக நினைத்ததாகவும், கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பெற்றோருடன் கௌசி வீட்டுக்குச் சென்று அவரை திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டு உள்ளதாகவும், அதற்கு அவரின் பெற்றோர் கவுசி இன்னும் திருமணம் வயதிற்கான சட்டபூர்வ வயதை எட்டவில்லை என்று கூறி பெண் கொடுக்க மறுத்து விட்டனர் என்றும், அதன் பிறகு கவரியின் செல்போனுக்கு அவர் பலமுறை தொடர்பு கொண்டு, பேசவில்லை இது இதனால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டதாகவும், இதனால் அவரை கொலை செய்ய கத்தியுடன் கவுசி வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு கவுசியிடம் பேச ஏன் ? மறுக்கிறாய் தன்னை திருமணம் செய்ய ஏன் ? சம்மதிக்கவில்லை என்று கேட்டதற்கு அவர் பதில் எதுவும் கூறவில்லை, எனவே தான் அவர் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தியதாகவும், இதனால் அவர் அலறியபடி கீழே விரிந்து உள்ளார். அவருடைய அலாரம் சத்தம் கேட்டு அவருடைய பாட்டி மயிலாத்தாள் அக்காள் ஹரிதாவும் வெளியே வந்து அவரை பிடிக்க முயன்றனர். இதனால் அவர் அவர்களை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். ஒரு தலை காதலால் சிறுமி அவருடைய பாட்டியை வாலிபர் கத்தியால் குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


0 கருத்துகள்: