அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டதற்கு சி.பி.ஐ எதிர்ப்பு.: டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு !!!
அரவிந்த் கேஜரிவாலை விடுவித்து சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மதுபானக் கொள்கையில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வராகப் பதவி வகித்த மணீஷ் சிசோடியா ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சி.பி.ஐ, விடுவிப்புக்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் கடந்த ஆம் ஆத்மி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட டெல்லி மதுபானக் கொள்கையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரித்த சி.பி.ஐ, அதில் தொடர்பு இருப்பதாக மணீஷ் சிசோடியாவையும் அரவிந்த் கேஜரிவாலையும் கைது செய்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா உள்பட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும் விடுவிப்பதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து உள்ளது.

0 கருத்துகள்: