*கோவையின் புதிய அடையாளம்: 'தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகின்றார்.....*
*ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டம் ; அறிவுசார் மையமாக உருவெடுக்கும் கோவை - பணிகளைத் துரிதப்படுத்த முதல்வர் உத்தரவு !!!*
https://www.youtube.com/live/uxpn2eqwn28?si=gB1s2ZCasHYgf24R
கோவை காந்திபுரம் பகுதியில் 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தினை தமிழக முதலமைச்சர் தற்போது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
நூலகத்தின் பணி நிலை,வசதிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு வருகிறார்.
கோவை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான 'தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம்' கட்டுமானப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்தின் அறிவுப் பெட்டகமாக இந்த மையம் அமைய உள்ளது.
இந்தத் திட்டத்திம் சுமார் ₹300 கோடி மதிப்பீட்டில் இந்த பிரம்மாண்டத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் நவீனக் கட்டடக்கலை வசதிகளுடன் கூடிய கட்டிடப் பணிகளுக்காக மட்டும் ₹245 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
உலகத் தரம் வாய்ந்த புத்தகங்கள் மற்றும் மின்-புத்தகங்கள் (E-books) வாங்குவதற்காக ₹50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இன்றைய காலத்திற்கு ஏற்ப அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் அதிவேக இணைய வசதிகளுக்காக ₹5 கோடி செலவிடப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் நேரில் சென்று கட்டுமானத்தின் தரம் மற்றும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குறிப்பாக, மாணவர்களுக்கான போட்டித் தேர்வுப் பிரிவு, குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதி மற்றும் அறிவியல் மையத்தில் அமைய உள்ள நவீனக் காட்சிப் பொருட்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை விரைந்து முடித்து, குறித்த காலத்திற்குள் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்கு இந்த மையத்தைக் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
இந்த மையம் பயன்பாட்டிற்கு வரும் போது, கோயம்புத்தூர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் உலக அளவில் கவனிக்கப்படும் நகரமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: