சனி, 28 பிப்ரவரி, 2026

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா டீசர் !!!

SHARE

 ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் டெக்ஸ்லா டீசர் !!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் “டெக்ஸ்லா” திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உள்ளது.

3, வை ராஜா வை, லால் சலாம் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்திற்கு “டெக்ஸ்லா” எனப் பெயரிடப்பட்டு உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தை, தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், புதுமையான கதை களத்துடன் உருவாகும் “டெக்ஸ்லா” திரைப்படத்தின் டைட்டில் டீசரை படக் குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

சினிமா பாரடைசோ, தி லாஸ்ட் ஷோ போன்ற படங்களின் பாணியில் சினிமா மீதான சிறுவன் ஒருவனின் ஈர்ப்பை அடிப்படையாகக் கொண்டு வெளியாகி உள்ள இப்படத்தின் டீசர் ரசிகர்கள் இடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: