சனி, 21 பிப்ரவரி, 2026

பாலியல் தொந்தரவு புகார்: தமிழ்நாடு சிறப்பு காவல் படை IV படை கமாண்டண்ட் இடைநீக்கம் !!!

SHARE

 பாலியல் தொந்தரவு புகார்: தமிழ்நாடு சிறப்பு காவல் படை IV படை கமாண்டண்ட் இடைநீக்கம் !!!


கோவைபுதூரில் செயல்பட்டு வரும் Tamil Nadu Special Police – IV படை கமாண்டண்ட் senthil Kumar மீது பாலியல் தொந்தரவு குறித்த புகார்கள் எழுந்துள்ளன.

 சம்பந்தப்பட்ட புகார்கள் Internal Complaints Committee (ICC)க்கு அனுப்பப்பட்டுள்ளது. பயிற்சிக்கு சேர்ந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட 

புகார்களின் தன்மை மற்றும் வழக்கின் சூழ்நிலை கருதி, அவரை உடனடியாக பணியிலிருந்து இடைநீக்கம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கை Tamil Nadu Civil Services (Discipline and Appeal) Rules, 1955 – விதி 17 (e) ன் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசின் முன் அனுமதி இன்றி அவர் தலைமையகத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ICC விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்த கட்ட நிர்வாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: