கோவை, மேட்டுப்பாளையம் தி.மு.க வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு – கூடலூர் நகர்மன்ற தலைவர் வீட்டு முன்பு 1000க்கும் மேற்பட்ட மக்கள் கூடியதால் பரபரப்பு !!!
கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக கவிதா கல்யாணசுந்தரம் அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கூடலூர் நகர மன்ற தலைவராக இருக்கும் அறிவரசு அவர்களுக்கு மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமான பல்வேறு கருத்துகள் நிலவி வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றிய செயலாளர், நகர செயலாளர், கூடலூர் பேரூராட்சி தலைவர், தற்போது நகராட்சி தலைவர் என பொறுப்பு வகித்து மக்கள் பணியில் ஈடுபட்டு வந்த அறிவுரசு அவர்களுக்கு மேட்டுப்பாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அவரது வீட்டின் முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் இன்று காலை ஒன்று சேர்ந்து இதை மறுபரிசீலனை செய்து கட்சிப்பணி செய்தவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்கிட வேண்டுமென வேதனை தெரிவித்துக் கூடி ஆர்ப்பாட்டம் செய்யும் முற்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை சென்னையிலிருந்து வந்த அறிவரசு வீட்டின் முன்பு கூடி ஆதரவாளர்களிடம் நல்லாட்சி நடத்திவரும் தமிழக முதல்வர் திட்டங்களை எடுத்துக் கூறி தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற வேற்றுமை நீக்கி பாடுபட வேண்டும், கட்சி கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்பு தெரிவிக்க கூடாது, திமுக மாபெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வராக மீண்டும் முக ஸ்டாலின் பொறுப்பேற்க அனைவரும் பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார். அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் தொடர்ந்து நல்லாட்சி நடைபெறும் என ஆதரவாளரிடம் பேசி சமாதானம் செய்து அனைவரையும் அனுப்பி வைத்தார். இதனால் இங்கு 3 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்: