கோவை, வாளையார் அருகே கோர விபத்து : கட்டுப்பாட்டை இழந்த இன்னோவா கார் மோதி கேரள புகைப்படக் கலைஞர்கள் இருவர் பலி !!!
கோவை - கேரளா எல்லைப் பகுதியான வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே நேற்று நேரிட்ட பயங்கர கார் விபத்தில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை, கோவை, வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த விஜய் (51) என்பவர், TN 10 AT 7007 என்ற எண்ணுள்ள இன்னோவா (Innova) காரைக் கொச்சின் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கோவை நோக்கி அதிவேகமாக ஓட்டி வந்து உள்ளார்.
வாளையார் பழைய சோதனைச் சாவடி அருகே வந்த போது, கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பில் (Center Median) பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் எதிர் திசைக்குத் தூக்கி வீசப்பட்டு, சேலத்தில் இருந்து கொச்சின் நோக்கிச் சென்று கொண்டு இருந்த KL 09 AL 2277 என்ற சுவிஃப்ட் டிசையர் (Swift Desire) கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் சுவிஃப்ட் காரில் பயணித்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
வினிஷ் (35): பாலக்காட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
அஜித் (25): சித்தூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் அபிமோகன் (20) & சுனில் (52): சுவிஃப்ட் காரில் வந்த இவர்களுக்குத் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தை ஏற்படுத்திய இன்னோவா கார் ஓட்டுநருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கே.ஜி.சாவடி போலீசார், விபத்துக்கு உள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து இன்னோவா கார் ஓட்டுநர் விஜய் மீது மிக அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை இயக்கி உயிரிழப்பு ஏற்படுத்தியதாக (IPC 304A உள்ளிட்ட பிரிவுகள்) வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

0 கருத்துகள்: