100 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு : முக்கிய குற்றவாளி கேரளா தப்பி ஓட்டம் - தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை !!!
கோவை, குனியமுத்தூர் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவிற்கு தப்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இடையர்பாளையம் கறிவேப்பிலை தோட்டம் பகுதியில் சேக் முகமத் என்பவர் கார் உதிரி பாகங்கள் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அங்கு போலீசாரின் அதிரடியில் 100 கிலோ கஞ்சா சிக்கியது.
உக்கடம் அப்பாஸ், போத்தனூர் ரூபன், வெள்ளலூர் பென்னி ஜேக்கப், ஆலுவா நவ்புல், ஒர்க் ஷாப் உரிமையாளர் போத்தனூர் ஷேக்முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வாங்கி வரும் உக்கடம் ஜலீல் மட்டும் சிக்கவில்லை.
அவர் மீது போத்தனூர், உக்கடம், குனியமுத்தூர், கடைவீதி காவல் நிலையங்களிலும், பிற மாவட்ட, மாநிலங்களில் 20 க்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தில் வழக்குகள் உள்ளன. இவர் கேரளாவுக்கு தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. தனிப்படை போலீசார் கேரளா சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

0 கருத்துகள்: