ஞாயிறு, 29 மார்ச், 2026

உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி ஆண்டிபட்டியில் மொய் பணம் ரூ.13 லட்சம் பறிமுதல் !!!

SHARE

 உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி ஆண்டிபட்டியில் மொய் பணம் ரூ.13 லட்சம் பறிமுதல் !!!

உரிய ஆவணம் இல்லாததால், மொய்ப்​ பணம் ரூ.13 லட்​சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறி​முதல் செய்து ஆண்​டிபட்டி கருவூலத்​தில் ஒப்படைத்தனர்.

தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வுப்​படி, ஆவணமின்றி கொண்டு செல்​லப்​படும் பணம் மற்றும் பொருட்​கள் பறிமுதல் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. அதன்​படி, தேர்​தல் பறக்​கும் படையினர் கண்​டமனூர் அருகே ராஜேந்​திரா நகர் பகு​தி​யில் வாக​னச் சோதனை​யில் நேற்று ஈடு​பட்​டு இருந்​தனர். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை​யிட்​டனர். அதில் ரூ.12 லட்​சம் இருந்தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து பணம் கொண்​டு​ வந்த அம்மச்சியாபுரத்​தைச் சேர்ந்த இளையராஜாவிடம் அதிகாரி​கள் விசா​ரணை நடத்​தினர். அதில், கடமலைக்​குண்டு அருகே அய்​ய​னார் கோயி​லில் வசந்த விழா நடத்​தி, அதில் கிடைத்த மொய்ப்​பணத்தை வீட்​டுக்கு கொண்டு செல்​வ​தாகத் தெரி​வித்​தார். ஆனால், அவரிடம் அதற்​கான ஆவணம் இல்​லாத​தால் பணத்தை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

இதே​போல், ஆண்​டிபட்டி புறநகர் பகு​தி​யில் பறக்கும் படை​யினர் சோதனை செய்​து​கொண்​டு இருந்​தனர். அப்​போது கேரள மாநிலம் குமுளி​யில் இருந்து உசிலம்​பட்டி நோக்​கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் குமுளியைச் சேர்ந்த திவான் மைதீன் ரூ.1 லட்​சம் வைத்​து இருந்​தது தெரிய​வந்​தது.

விசா​ரணை​யில், ராஜ​பாளை​யத்​தில் நடை​பெற உள்ள நிச்​சய​தார்த்த விழா​வில் மொய் செய்​வதற்​காக பணத்தை கொண்​டு​ செல்​வ​தாகத் தெரி​வித்​தார். ஆனால், உரிய ஆவணம் இல்​லாத​தால் அதி​காரி​கள் 

அப்​பணத்தை பறி​முதல் செய்​தனர். இரண்டு இடங்​களி​லும் பறி​முதல் செய்​யப்​பட்ட பணத்தை பறக்​கும் படை​யினர் ஆவணப்​படுத்​தி, சீலிட்டு ஆண்​டிபட்டி கரு​வூலத்​தில் ஒப்படைத்​தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: