ஞாயிறு, 29 மார்ச், 2026

ம.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு !!!

SHARE

 ம.தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு !!!

தி.மு.க அணியில் ம.தி.மு.க வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ம.தி.மு.க வேட்பாளர்களை கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்தார்.

அதன்படி, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், கடையநல்லூரில் தி.மு.ராஜேந்திரன், மொடக்குறிச்சியில் செந்தில்நாதன், சீர்காழியில் செந்தில்செல்வன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். இதில் பூமிநாதன் ஏற்கெனவே மதுரை தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி, அதேபோல மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாகை தொகுதியில் ஜவாஹிருல்லா, மணப்பாறை தொகுதியில் அப்துல் சமது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: