புதன், 18 மார்ச், 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க தனித்துப் போட்டி - ஆதவ் அர்ஜுனா !!!

SHARE

 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க தனித்துப் போட்டி - ஆதவ் அர்ஜுனா !!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று தெரிவித்தார்.

சென்னை பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது:

''90 தொகுதிகள் தருவதாக தமிழக வெற்றிக் கழகத்திடம் பேரம் பேசினார்கள். ஆனால், த.வெ.க அடி பணியவில்லை. 234 தொகுதிகளிலும் த.வெ.க தனித்துப் போட்டியிடும்.

ஆட்சியில் பங்கு என்பது எல்லாம் இல்லை. எனக்கு ஆஃபர் தேவையில்லை, தமிழக மக்களின் நலனும், நம்பிக்கையுமே முக்கியம் என விஜய் கூறினார்.

முதல்வர் பதவிக்காக டெல்லிக்கு அடி பணிய மாட்டோம். மதச்சார்பற்ற அரசை அமைக்கும் வலிமையை மக்கள் நிச்சயம் தருவார்கள்.

படத்தை வெளியிட மத்திய அமைச்சரை சந்தித்து விட்டு வரும் பழக்கம் எங்களுக்கு இல்லை. தமிழகத்தில் பராசக்தி வெளியிடப்பட்ட நிலையில், ஜனநாயகன் நிறுத்தப்பட்டதற்கு அரசியல் சூழ்ச்சியே காரணம். இந்த அரசியலை அச்சமின்றி விஜய் எதிர்கொள்வார்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைப் பேச்சு குறித்து விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா

த.வெ.கவில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி அசோக்கை சுட்டிக்காட்டி, ''த.வெ.க வுக்கு வர வேண்டும் என்றால் நேர்மை, உண்மை என்ற தகுதி இருந்தால் போதும். நம் அன்புக்குரியவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் என் தலைவர் ரஜினி என்றவர் விஜய்'' என ஆதவ் அர்ஜுனா பேசினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: