வியாழன், 26 மார்ச், 2026

புதுச்சேரி தேர்தலை ஒட்டி 3 நாள் கடை மூடல் !!!

SHARE

 புதுச்சேரி தேர்தலை ஒட்டி 3 நாள் கடை மூடல் !!!

2026 புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கையான மே 4-ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டு உள்ளது.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது அமைதியைப் பேணவும், தேர்தலை நேர்மையாக நடத்தவும் மதுக் கடைகளை மூட துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டு உள்ள அரசிதழ் அறிவிப்பில், 

வாக்குப்பதிவு: ஏப்ரல் 9, 2026. வாக்கு எண்ணிக்கை: மே 4, 2026.

வாக்குப் பதிவு மற்றும் எண்ணிக்கை அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய, பின்வரும் நாட்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை (3 நாட்கள்): வாக்குப் பதிவை முன்னிட்டு மே 4 அன்று வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு டாஸ்மாக் கடையில் மது விற்கபடாது. புதுச்சேரி கலால் விதிகள் 1970, விதி 199-ன் கீழ் வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி, புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள சாராயக் கடைகள் (Arrack shops), கள்ளுக் கடைகள் (Toddy shops), மதுபானக் கடைகள் (Liquor shops), பார்கள் மற்றும் உணவகங்களில் உள்ள பார்கள் (Bars and Restaurants serving liquor) ஆகிய அனைத்தும் மேற்கண்ட நாட்களில் கட்டாயமாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனத் துணை நிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் அரசுச் செயலாளர் (வருவாய்) மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: