வியாழன், 26 மார்ச், 2026

வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் : விடுமுறைகளால் வேட்பாளர்களுக்கு புதிய சவால் !!!

SHARE

 வேட்புமனு தாக்கலுக்கு 4 நாட்கள் மட்டுமே அவகாசம் : விடுமுறைகளால் வேட்பாளர்களுக்கு புதிய சவால் !!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் குறித்த முக்கிய அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. இதன்படி, வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்ணயிக்கப்பட்ட 8 நாட்களில் 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால், வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வெறும் 4 நாட்கள் மட்டுமே அவகாசம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு மற்றும் நேர விபரங்கள்;

மனு தாக்கல் தொடங்கும் நாள்: 30.03.2026 (திங்கட்கிழமை)

மனு தாக்கல் செய்ய கடைசி நாள்: 06.04.2026 (திங்கட்கிழமை)

நேரம்: காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை.

வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத விடுமுறை நாட்கள்

1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழ் (Negotiable Instruments Act), பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ள நாட்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய இயலாது.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: