ஞாயிறு, 1 மார்ச், 2026

அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவர் சேர்க்கை !!!

SHARE

 அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவர் சேர்க்கை !!!

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவர் சோ்க்கை திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் நடைபெற உள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும் நாளில் தொடங்கப்படுவது வழக்கமாக இருந்தது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு 2024-ஆம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கப்பட்டு வருகிறது. அதற்கு பரவலாக பெற்றோா்களிடம் வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (மார்ச் 2) தொடங்க உள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் உரிய முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகே உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

அதேபோல், தமிழக அரசின் நலத் திட்டங்கள், உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வை பெற்றோருக்கு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா் சேர்க்கை விகிதம் கணிசமான அளவில் உயர வேண்டும். மேலும், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டுமென பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: