திங்கள், 16 மார்ச், 2026

நடிகை விந்தியா கோவை அதிரடிப் பேச்சு ; அ.தி.மு.க பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா - ஸ்டாலின் அரசு மீது விந்தியா குற்றச்சாட்டு !!!

SHARE

 நடிகை விந்தியா கோவை அதிரடிப் பேச்சு ; அ.தி.மு.க பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் விழா - ஸ்டாலின் அரசு மீது விந்தியா குற்றச்சாட்டு !!!


"மைக்கிலே மேகி கிண்டுறாரு ஸ்டாலின்" ; கோவையில் நடிகை விந்தியா 'அனல்' பேச்சு - தி.மு.க அரசை ஒரு பிடி பிடித்த அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் !!!


*"6 லட்சம் கோடி கடன்... 7 கிட்னி திருட்டு... இதுதான் விடியா அரசின் சாதனையா?" ; கோவையில் நடிகை விந்தியா சரவெடி - ரத்தத்தின் ரத்தங்கள் உற்சாகம் !!!

கோவை, பேரூர் செட்டிபாளையம் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற மகளிர்க்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க வின் நட்சத்திர பேச்சாளரும், நடிகையுமான விந்தியா பேசும் போது :-

மக்களை ஏமாற்றி விட்டு, தேர்தல் முடிந்ததற்கு பின்னர் கமிஷன் அடிக்க, கரப்ஷன் செய்ய, ஊழல் செய்து, ஜெயிலுக்கு போய் சில அரசியல்வாதிகள் போன்று கிடையாது. எங்கள் அண்ணன், களத்தில் நிப்பாரு, உங்கள் கையைப் பிடித்துக் கொண்டு இந்த மண்ணில் நிற்பார், அமைச்சரானாலும், அவருக்கு கோயம்புத்தூர் கோயம்புத்தூர் தான்.. தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர் தான்..

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஞாபகம் வைத்து இருக்கிற அளவுக்கு சாதனைகள் ஐந்து ஆண்டுகளில் தி.மு.க செய்து உள்ளது என்று *"மைக்கிலே மேகி கிண்டுறாரு ஸ்டாலின்"* நான் யோசித்துப் பார்த்தேன், அப்படி என்ன ? சாதனை செய்தார்கள் என்று சில உண்மைகள் இருக்கா என்று, அந்த அறிக்கையில் பார்த்தால்,

 இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 79 ஆண்டுகள் ஆகி விட்டது 79 ஆண்டுகளில் எந்த ஆளத் தெரியாத அரசும், 6 லட்சம் கோடி 5 வருடத்தில் கடனாக வாங்குனது இல்ல. ஐந்து ஆண்டுகளில் 6 லட்சம் கோடி கடன் வாங்கி சாதனை படைத்த அரசு ஸ்டாலின் மாடல் தி.மு.க அரசு, 63 வருஷ திராவிட ஆட்சி காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து செத்தவர்களுக்கு 10 லட்சம் நிதி உதவி எந்த ஆட்சியிலும் கொடுத்ததில்லை, குடிகாரனுக்கு அள்ளி கொடுக்க சாதனை செய்தது ஒரே அரசு இந்த ஸ்டாலினுடைய தி.மு.க அரசு.

அண்ணா யூனிவர்சிட்டி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆனால் இப்படி ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமை நடந்ததே இல்லை, ஒரு தி.மு.க கட்சிக்காரர்களை வைத்து, அவனை காப்பாற்றுவதற்கு ஒரு தி.மு.க அமைச்சரை வைத்து, அவரை காக்க ஒரு தி.மு.க போலீசை வைத்து ஒரு மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை செய்து முடித்ததாக குற்றம் சாட்டியவர்.

இந்த விஷயத்தில் இந்த தி.மு.க அரசு செய்து உள்ளது ஸ்டாலினுடைய அரசு செய்து உள்ளது. காமராஜர் காலத்தில் இருந்தும், நமது அண்ணன் எடப்பாடியார் காலம் வரைக்கும் எல்லா ஆட்சியிலும், மாணவர்கள் ஸ்கூலுக்கு சென்று படித்துக் கொண்டு இருந்தார்கள் ஆனால் இந்த தி.மு.க ஸ்டாலினுடைய அரசு மற்றும் போதையில் சுற்றிக் கொண்டு உள்ளதாகவும், போதையில் கூட படிக்கின்ற பெண்களை கெடுக்கிறார்கள், போலீஸ்காரர்களை அடிக்கிறார்களை, அம்மா, அப்பாவை வெட்டுகிறார்கள். இந்த விஷயத்துல சாதனை செய்து உள்ளது இந்த தி.மு.க அரசு என்றார்.

கிட்னி தானம் கண்டுபிடித்த நாட்களில் இருந்து இன்று வரை எந்த ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ வும் கிட்னியை திருடுவதில்லை, ஆனால் 7 கிட்னிகள் திருடிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ சாதனை படைத்தது இந்த தி.மு.க ஸ்டாலின் அரசாங்கம் என்று கடுமையாக விமர்சித்தார்.

 டாஸ்மார்க் என்று கண்டுபிடித்த பிறகு அரசு டாஸ்மார்க்களை நடத்த ஆரம்பித்ததற்கு பின்பு பாட்டிலுக்கு 10 ரூபாய் திருடி, ஊழல் செய்து கைதியாகி, அமைச்சராகவும் தமிழ்நாட்டுல ஒருத்தரை பண்ண வச்சு சாதனை படைத்த அரசாங்கம் இந்த தி.மு.க அரசாங்கம் என்றவர்.

 சோமாலியா நாட்டை அழிப்பதற்கு 30 நாட்கள் ஆச்சு, அந்த நாடு நாசமா போறதுக்கு ... ஐந்தே ஆண்டுகளில் தமிழ்நாட்டை நாசமாக்கின சாதனை செய்தது இந்த தி.மு.க அரசு. 

 இது போன்ற சாதனைகள் ஆகிய பெருமை ஸ்டாலினுக்கு உண்டு. இதற்கு மேல் தி.மு.க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் தி.மு.க இருக்கும், ஆனால் தமிழ்நாடு இருக்காது.

 பெண்களை பூமித்தாய், பூமாதேவி என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு ரொம்ப பொறுமை எவ்வளவு தூரம் துன்பங்கள் கொடுத்தாலும் தாங்குவார்கள். அதனால் தான் பூமித்தாய் என்பார்கள். ஆனால் பூமி கூட ஒரு நாள் பொறுமையை இழந்து விட்டு இரண்டாக பிளந்து உலகத்தையே விழுங்கி விடும், பூமித் தாய்க்கும் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நடக்கின்ற சாமிக்கும் எல்லை உண்டு. இதில் ஸ்டாலின் சொல்லுகிறார் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று, வெல்லும் தமிழ் பெண்கள் என விளம்பரம் கொடுக்கிறார் வெட்கமே இல்லாமல் ஸ்டாலின் என்றார்.

பெண்களுடைய நிலைமை என்ன என்று ஸ்டாலினுக்கு கூறுகிறேன், கனிமொழியோ, துர்கா ஸ்டாலினோ , கீதா ஜீவனோ, தமிழச்சி தங்கபாண்டியன் ஜெய்ச்சா பெண்கள் ஜெயிச்ச மாதிரி இல்ல, ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பெண்கள் ஜெயித்தால் தான் பெண்கள் ஜெயித்தது போன்று. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை சாதாரண பெண்கள் சந்தைக்கு போக முடியவில்லை, குடும்பப் பெண்கள் கோவிலுக்கு போக முடியவில்லை, சின்ன குழந்தைகள் ஸ்கூலுக்கு செல்ல முடியவில்லை, கன்னிப் பெண்கள் கல்லூரிக்கு போக முடியவில்லை, ஒரு பெண் கணவனோடு , காதலனோடு, அப்பா, அம்மாவோடு, நிம்மதியா வெளியில் நடந்து செல்ல முடியவில்லை என்று, ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே சென்றாள் அவங்க குடும்பம் என் பொண்ணு நேரத்தோடு வருவாளா ? என்று கவலைப்படுவதில்லை.

 மானத்தோடு வருவாளா ? உயிரோடு வருவாளா ? கவலைப்படுகிறார்கள் இது எதனால் ? நடக்கிறது. இதற்கு காரணம் என்ன ? போதை, கஞ்சா போதை, டாஸ்மாக் போர்கள் முன் வாசல், பின் வாசல் என 24 மணி நேரமும் சாராயம் ஓடுகிறது. அந்த போதையில் அவன் பார்க்கிறது தங்கையா ? தாயா ? தாரமா ? யார் ? என்று அவனுக்கு தெரியவில்லை, நீங்களே சொல்லுங்கள் கொஞ்சம் யோசிங்கள் 2 1/2 வயது குழந்தை ஒரு தி.மு.க காரர்கள் கெடுக்கிறான். சாதாரண நிலையில் இருக்கிற ஒருத்தன் இவ்வளவு கொடூரமான வேலையை செய்ய முடியுமா ? ஒரு மிருகத்தால் தான் இது போன்ற செய்ய முடியும்...

பல்லு முளைக்காத குழந்தையை கெடுக்கிறார்கள், பல்லு இல்லாத பாட்டியையும் கெடுக்கிறார்கள். எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.

 சென்னையில் 22 வயது பெண்ணை நான்கு பேர் இரவு முழுவதும் கற்பழித்ததாக உள்ளார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, என்று நாங்கள் சும்மா சொல்லவில்லை தூத்துக்குடியில் 14 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உள்ளதாக கூறியவர், பெண்களோட பிச்சையில் ஆட்சி அமைத்தார் ஸ்டாலின்.

 இன்றைக்கு தி.மு.க ஆட்சியில் இருக்கிறது என்றால் அது தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாட்டு பெண்கள் போட்ட பிச்சை என்றார். ஆனால் இன்றைக்கு பெண்களுடைய நிலைமை என்ன தூத்துக்குடியில் விசாரிப்பதற்காக, நாடகமாடுவதற்காக சென்றார்கள் கனிமொழி. தூத்துக்குடிக்கு ராணி என்றும், ராணி பேசி இருப்பாங்க அவங்க ராணி நான் எப்படி ? இருக்கணும்.

 அந்த கோட்டையில் இருக்கிற மக்களை எல்லாம் உங்களோடு சேர்த்து எதிரிகளை போராட வேண்டும், ஆனால் தூத்துக்குடியில் என்ன ? நிலைமை அந்த தூத்துக்குடி கோட்டைக்குள்ளையே ராணியை வர விடாமல் மக்கள் துரத்தினார்கள்.

 விளாத்திகுளத்தில் விசாரிக்கப் போன கனிமொழி பாதுகாப்புக்கு 100 போலீஸ் கொடுத்து உள்ளார்கள். ஆனால் சின்ன பொண்ணு, கன்னி பொண்ணுங்க, தனியா போற பொண்ணுங்களுக்கு இந்த ஸ்டாலின் அரசு எந்தவித ஒரு பாதுகாப்பும் இல்லை. இந்த பெண்கள் விரோத தி.மு.க, பெண்களை சாகடிக்கிற தி.மு.க தமிழகத்தில் உங்களுக்கு வேண்டுமா ? என்று கேள்வி எழுப்பியவர், பெண்களாகிய நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றார்.

இரட்டை இலைக்கு தான் உங்கள் ஓட்டு...., 

எதிர்த்து எவன் வந்தாலும் வைப்போம் வேட்டு....

 அண்ணன் எடப்பாடியாருக்கு சி.எம் சீட்டு....

எவன் வந்தாலும் நீங்கள் துரத்தி அடிக்க வேண்டும்.

இவர்கள் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு தமிழ்நாட்டைப் பெண்கள் அவர்கள் அடிமை என்று எண்ணிக் கொண்டு உள்ளார்கள். நம் என்ன ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டு தி.மு.க விற்கு நேர்ந்து விட்டு உள்ளோமா ? நம்ம வீட்டுப் பெண்களை நீங்கள் வாங்குகின்ற ஒவ்வொரு ரூபாவும் ஸ்டாலின் கொடுப்பது உங்களுக்கு அக்கவுண்டில் வருகின்ற ஒவ்வொரு பணமும் உங்கள் குடும்ப செலவிற்கில்ல, நமக்கு தெரிந்த பெண்களோட சாவிற்கு, காரியத்திற்கு செலவு செய்ய உங்களுக்கு அக்கவுண்டில் வருகின்ற . ஒவ்வொரு பணமும், உங்களுக்காக இல்லை உங்கள் முன்னேற்றத்திற்காக இல்லை, உங்கள் அழிவுக்காக வருவதாக கூறியவர், தயவு செய்து அதை எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றார்.

 போன முறை எத்தனையோ ? பொய்யான வாக்குறுதிகள், விளம்பரங்களை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க ஸ்டாலின், இப்பவும் கட்டு, கட்டாக மூட்டை பொய்களை முடிச்சுக்களை தூக்கிக் கொண்டு விளம்பரத்தை கொண்டு அவர்கள் பொய் பிரச்சாரத்தை விளம்பரத்தை மட்டுமே நம்பி இருக்காதீர்கள். உண்மையான விஷயங்களை சொல்லவும் மாட்டார்கள், நேருக்கு, நேராக தைரியமாக, நேர்மையாக சண்டை போடுவதற்கு தி.மு.க விற்கு தெரியாது, ஸ்டாலினுக்கும் தெரியாது எனக் கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: