திங்கள், 16 மார்ச், 2026

SHARE

 சில்வர் அண்டா வினியோகம் : கோவையில் தி.மு.க வின்னர் தாராளம்.....

கோவை மாவட்டம் வாக்காளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் சில்வர் அண்டா விநியோகித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட தி.மு.க சார்பில் பூத் வாரியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வாக்காளர் தீவிர திருத்த பணி நடந்த போது வீடு, வீடாகச் சென்று எடுத்த பட்டியல் அடிப்படையில் உத்தேசமாக எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பது அடையாள காணப்பட்டது.

தி.மு.க கூட்டணி கட்சிகள் அல்லது நடு நிலை என வாக்காளர்களை தி.மு.க வினர் பிரித்து பட்டியல் தயாரித்தனர். இதில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்க டோக்கன்கள் வழங்கினர்.

குடும்பத் தலைவர் பெயர், தொகுதி, பூத் எண், தொடர் எண், பகுதி கழகம், குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் ஆண், பெண் மொத்தம் குறிப்பிட்டு வழங்கப்பட்டது. தற்பொழுது வார்டு செயலாளர் மற்றும் கிளைச் நிர்வாகிகள் மூலமாக வீடு, வீடாகச் சென்று டோக்கன்களை சரி பார்த்து விட்டு சில்வர் அண்டா நேற்று தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு வழங்கினர்.

 டோக்கனில் தொடர் எண்ணுக்கு கீழ் 4 பாக்ஸ் இருக்கிறது. அதில் ஒரு பாக்ஸில் டிக் செய்து திருப்பிக் கொடுத்தனர்.

அதனால் இன்னும் மூன்று பரிசு பொருட்கள் வரும் என்கின்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டது.

 ஆனால் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் என நேற்று அறிவிக்கப்பட்டது. 

 அதற்கு முன்னதாக டோக்கன் கொடுக்க அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்க கட்சி உறுப்பினர் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தி.மு.க வினர் கூறும்போது, முதல் கட்டமாக அண்டா வந்தது, குடும்பத்துக்கு ஒன்று வீதம் வழங்கி டோக்கனில் குறிப்பிட்டு கொடுப்பதாகவும், இன்னும் பரிசு பொருள்கள் வருமென எதிர்பார்த்ததாகவும், எனவே மக்களிடம் டோக்கன்களை பத்திரமாக வைத்து இருக்க அறிவுறுத்தியதாகவும், ஏற்கனவே பட்டியல் படி ஒருவருக்கு கூட விடுபடாமல் பரிசுப் பொருட்கள் வழங்க விடுவோம் என்று கூறிய நிலையில் தற்பொழுது தேர்தல் அறிவித்ததால் மேலும் பல பகுதிகளில் அண்டா வழங்காமல், ஆங்காங்கே ஒவ்வொரு இடங்களிலும் மொத்தமாக வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: