கோவை, ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் : வாகனம் இயக்க அனுமதி வேண்டும் - மலைவாழ் மக்கள் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வனத்துறை அலுவலகம் முன்பு தர்ணா...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் எருமை பாறையை சேர்ந்த பிரசாந்த் இவர் மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்.இவர் பூர்விகம் டாப்ஸ்லிப் ஆகும். மலைவாழ் மக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தான் அப்பகுதி மக்களுக்கு வாடகைக்கு செல்ல வாகனம் வாங்கி உள்ளார். மேலும் வனப் பகுதி சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்லவும் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு உள்ளார் பிரசாந்த்.
வனத்துறையினர் அனுமதி தர மறுப்பதால் டாப்ஸ்லிப் வனத்துறை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் தமிழக அரசு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல வாகனங்கள் தரப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்துக்கு அரசு பஸ்ஸும் உள்ளது. தனிநபர் வாகனம் வனப்பகுதியில் இயக்க அனுமதி இல்லை எனவும் இந்த சம்பவம் குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

0 கருத்துகள்: