தொகுதி பங்கீட்டில் இழுபறி ? டி.டி.வி தினகரன் இன்று டெல்லி பயணம் !!!
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழலில் அ.தி.மு.க தொகுதி பங்கீடு இன்னும் நிறைவு செய்யவில்லை, இதற்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயில் சென்னை வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதால், நேரடியாக எடப்பாடி பழனிச்சாமி அவசரமாக டெல்லி சென்று உள்ளார். டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு உள்ளார்.
அ.தி.மு.க விடம் இருந்து பா.ஜ.க 30 தொகுதிகளும், அ.ம.மு.க 8 தொகுதிகளும், சிறு கட்சிகளுக்கு 12 தொகுதிகளும் என மொத்தம் 50 சீட்டுகள் கேட்பதாக சொல்லப்படுகிறது. சிறு கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட வைக்க பா.ஜ.க திட்டமிட்டு உள்ள நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்க முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி வடிவம் பெறுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த பரபரப்புக்கு நடுவே அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் டெல்லி செல்ல உள்ளார். காலை 11 மணிக்கு டி.டி.வி தினகரன் டெல்லி புறப்பட்டு செல்கிறார். டெல்லியில் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து டி.டி.வி தினகரன் பேசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: