தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி ; மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் இன்று கமலஹாசன் அவசர ஆலோசனை !!!
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்ய இடம்பெற்று உள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கப்பட்டு விட்ட நிலையில், சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதிகள் வழங்குவதாகவும், அதில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு தி.மு.க தலைமை வலியுறுத்தியது. ஆனால் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் எங்களுக்கு ஆறு தொகுதிகள் வேண்டும், அதுவும் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று கூறி 15 தொகுதிகள் அடங்கிய பட்டிலேயே ஏற்கனவே தி.மு.க தலைமையிடம் வழங்கி உள்ளார்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவினர் நேற்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தொகுதி பங்கீடு குழுவினரை சந்தித்து பேசினார்கள். ஆனால், இரண்டு தொகுதிகள் தி.மு.க சின்னத்திலேயே போட்டி என்பதை அறிந்தவுடன் அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறினார்கள்.
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தலைமையில் இன்று கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு அவசர கூட்டம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு அண்ணா நகரில் உள்ள ஹோட்டலில் ஷாம்கோவில் நடைபெறும் இந்த கூட்டம் தொடர்பாக கட்சி பொதுச் செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நிலைப்பாடு குறித்து கலந்தாலோசிக்க மக்கள் நீதி மய்ய கட்சி மாவட்ட செயலாளர்கள், அணிகள் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் அவசரக் கூட்டம் தலைவர் கமலஹாசன் தலைமையில் 20ஆம் தேதி இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவு இருக்கிறது.
சென்னையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்ய கட்சியின் அனைத்து மாவட்ட செயலாளர்கள், அணிகளின் மண்டல அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: