செவ்வாய், 31 மார்ச், 2026

கொளத்தூர் விஜய் பரப்புரையில் பாதுகாப்பு குறைபாடு ? தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கும் த.வெ.க நிர்வாகிகள் !!!

SHARE

 கொளத்தூர் விஜய் பரப்புரையில் பாதுகாப்பு குறைபாடு ? தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்கும் த.வெ.க நிர்வாகிகள் !!!

விஜய் பரப்புரையில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு காரணமாக காவல்துறை அதிகாரிகளை மாற்றக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்திக்க உள்ளதாக த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்து உள்ளார்.

சென்னை பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த த.வெ.க தலைவர் விஜய் தொடர்ந்து பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். பெரம்பூரை தொடர்ந்து கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய், வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா,"கொளத்தூரில் த.வெ.க தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைக்கு போதிய காவல் பாதுகாப்பு வழங்கப்படவில்லை" என குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சைக் கேட்டு காவல் துறை செயல்பட்டு வருகிறது. விஜய் பரப்புரையின் போது திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெரம்பூரில் பாதுகாப்பு கொடுத்த காவல் துறையினர், கொளத்தூரில் பாதுகாப்பு தரவில்லை. கொளத்தூரில் அதிகமான மக்கள் திரண்ட நிலையில், காவல் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கொளத்தூரில் முதல்வருக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது. விஜய் பரப்புரை மேற்கொண்டால் அவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் அஞ்சுகிறார்கள். உரிய பாதுகாப்பு வழங்காத காவல் துறை அதிகாரிகளை பணிமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நாளை சந்தித்து முறையிட உள்ளோம்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: