வியாழன், 19 மார்ச், 2026

ஆவடியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவர் கைது !!!

SHARE

 ஆவடியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவர் கைது !!!

சென்னையை அடுத்த ஆவடியில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த ஆவடி கவரப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் ராதிகா. கணவரை இழந்த இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார். இருவரும் வீடு கட்டும் பணியில், கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

மணிகண்டன் மது அருந்து பழக்கம் உடையவர். இந்த நிலையில் வழக்கம் போல வேலைக்குச் சென்ற மணிகண்டன், மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தாக கூறப்படுகிறது. மதுபோதையில் இருந்த மணிகண்டன் சாப்பாடு சரியில்லை என்று கூறி ராதிகாவிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. வாய்த்தகராறு முற்றிய நிலையில் இருவரும் கைக்கலப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்பொழுது மணிகண்டன் ஆத்திரத்தில் ராதிகாவை துணியால் கழுத்தை இறுக்கியதாகவும், இதில், நினைவை இழந்த ராதிகா அங்கேயே சரிந்ததகாவும் தெரிகிறது. பின்னர் மணிகண்டன் அங்கு இருந்து வெளியே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, ராதிகா சுயநினைவின்றி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவரை தூக்கிக் கொண்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு சென்று உள்ளார். அங்கு ராதிகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து, மருத்துவமனை பணியாளர்கள், இதுதொடர்பாக ஆவடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார், ராதிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், மணிகண்டனை கைது செய்தனர்.

இதற்கு இடையே, மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை ஏற்படும் என்றும், பின்னர் சமாதானம் ஆகிவிடுவோம் என்றும் தெரிவித்து உள்ளார். "அதுபோலத் தான் தற்போதும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. கோபத்தில் ராதிகாவின் கழுத்தை நெரித்து விட்டு வெளியே சென்றேன். மீண்டும் வந்து பார்த்த போது அவர் மயங்கி இருந்ததால் மருத்துவமனை அழைத்து வந்தேன்" என மணிகண்டன் ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: