சர்வதேச பெண்கள் தினம் : பல்வேறு துறைகளில் சாதித்த இளம் பெண்களுக்கு பாராட்டு விழா - கோவையில் சிறப்புப் பாடல் வெளியீட்ட எம்.எல்.ஏ வானதி .... !!!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க அலுவலகம் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் இளம் பெண்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, பெண்களின் பெருமையைப் போற்றும் வகையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாடலை அவர் வெளியிட்டார்.
பின்னர் பேசிய வானதி சீனிவாசன், பெண்கள் அரசியல் மற்றும் சமூகத் தளங்களில் தடம் பதிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.
இந்த விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் இளம் பெண்களை பாராட்டி பேசியவர், கல்வி, விளையாட்டு, கலை மற்றும் சமூக சேவை எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் பெண்களுக்கு நினைவுப் பரிசுகளை எம்.எல்.ஏ வானதி வழங்கி கௌரவித்தார்.


0 கருத்துகள்: