தி.மு.க ஆட்சியின் லட்சணத்திற்கு விளாத்திகுளம் வழக்கு சாட்சி - பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் !!!
தமிழக பா.ஜ.க தலைவர் நைனார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ள எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்து உள்ளதாவது,
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதாகி உள்ள குற்றவாளி ஏற்கனவே 2020 மூதாட்டி ஒருவரை வன்புணர்வு செய்து கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் என்றும், தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஜாமினில் வெளியில் வந்த சரித்திர பதிவேடு கொண்ட குற்றவாளி துணிகரமாக மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபட்டும் அளவிற்கு தான் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரும்புக்கர ஆட்சி இருந்து இருக்கிறது. என்பதை எத்தகைய வெட்கக்கேடு, அதிலும் ஒவ்வொரு முறையும் கொடூர குற்றத்தை செய்து விட்டு அதை மறைக்க சிறு,சிறு குற்றங்களில் கைதாகி சிறையில் பாதுகாப்பு கவசம் போல் பயன்படுத்தி இருப்பதாக வெளிவந்து உள்ள செய்தி தி.மு.க ஆட்சியில் காவல் துறை தரந்தாழ்ந்து போனதையும், குற்றவாளிகள் தைரியமாக செயல்படுவதையும் பட்டவர்த்தனமாக்குறது.
விளாத்திகுளம் சிறுமி கொலைக்கு நீதி வேண்டி மக்கள் போராட்டம் வலுபெற்ற பின்னரும் பத்து நாட்களுக்கு குற்றவாளிகள் நாட்களாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய தி.மு.க ஏவல்துறை கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை குற்றவாளிகளை தப்பிக்க விட்டு இருக்கிறது. எத்தனை தமிழக மக்களை பலி கொடுத்து இருக்கிறது. நினைத்தாலே பதைபதைக்கிறது. மொத்தத்தில் சட்டம் - ஒழுங்கு அலட்சியம் காட்டும் தி.மு.க ஆட்சி வீழ்ந்தால் மட்டுமே தமிழக பெண்கள் வாழ முடியும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: