சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் விடுதி காப்பாளருக்கு 5 ஆண்டு சிறை...
தேனி மாவட்டம், போடி அருகே ஒரு குழந்தைகள் காப்பகத்தில், பெண் விடுதி காப்பாளராக பணியாற்றியவர் முனீஸ்வரி (வயது 29). கடந்த 2024-ம் ஆண்டு
அந்த விடுதியில் தந்தையை இழந்த 10 வயது சிறுவன் தங்கி இருந்தான். அந்த சிறுவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த சிறுவனுக்கு. முனீஸ்வரி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் இது குறித்து போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிவில் முனீஸ்வரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை மற்றும் 5,000 அபராதம் விகித்தும், 5,000 ரூபாய் கட்டுவதற்கு தவறினால் மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு இழப்பீடாக ரூபாய் 4 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதில் முனீஸ்வரிக்கு விதித்த அபராத தொகை ரூபாய் 5,000 அடங்கும் என்றும், மீதம் ரூபாய் 3 லட்சத்தி 95 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: