ஞாயிறு, 15 மார்ச், 2026

சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க போலீஸாருக்கு விடுமுறை - ஏ.டி.ஜி.பி வலியுறுத்தல் !!!

SHARE

 சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க போலீஸாருக்கு விடுமுறை - ஏ.டி.ஜி.பி வலியுறுத்தல் !!!

காவலர் பயிற்சிக் கையேட்டை வெளியிட்ட ஏ.டி.ஜி.பி மகேந்தர்குமார் ரத்தோட்.

போலீஸார் குடும்ப சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்று காவலர் நலத்துறை ஏ.டி.ஜி.பி மகேந்தர்குமார் ரத்தோட் தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் போலீஸார் குடும்ப நல மையத்தின் ’மகிழ்ச்சி’ திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி) சத்யபிரியா தலைமை வகித்தார். வேலூர் டிஐஜி தர்மராஜன், காவல் கண்காணிப்பாளர் என்.யுசிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனுஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக காவலர் நலத்துறை ஏ.டி.ஜி.பி மகேந்தர்குமார் ரத்தோட் பங்கேற்று பேசும்போது -

காவல் துறையில் பணியாற்றும் போலீஸார் முதல் அதிகாரிகள் வரை 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் மனதளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அவர்களின் மன அழுத்தத்தைத் தடுக்க தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் காவல் ஆய்வாளர்கள் தான் தந்தை போன்றவர். காவல் நிலையத்தில் உள்ள போலீஸாருக்கு ஏதாவது பிரச்னையெனில், காவல் ஆய்வாளர் தான் அதற்கு தீர்வு காண வேண்டும். குடும்பங்கள், உறவினா்களின் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல், அந்த மகிழ்ச்சியை போலீஸார் இழக்கின்றனர். போலீஸார் குடும்ப சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க விடுமுறை அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, வேலுார் ஆயுதப்படை அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வடக்கு மண்டல மகிழ்ச்சி நல்வாழ்வு மையத்தை ஏ.டி.ஜி.பி மகேந்தர்குமார் ரத்தோட் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மூத்த மனநல ஆலோசகர் ராமசுப்பிரமணியன், வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட ஏராளமான காவல் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: