ஏப்ரல் 23-ல் தமிழ்நாடு பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - மே 4-ல் வாக்கு எண்ணிக்கை !!!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனைத் தொடர்ந்து 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று அறிவித்தார்.
இதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30
வேட்பு மனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6
வேட்பு மனு பரிசீலனை - ஏப்ரல் 7
வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9
வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை - மே 4

0 கருத்துகள்: