அதிருப்தியில் சரத்குமார் ? - இன்று அவசர ஆலோசனை !!!
பா.ஜ.க வில் இருக்கும் நடிகர் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும், இன்று நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவை வெளியிடுவார் என்கிற தகவலும் வெளியாகி இருக்கிறது.
நடிகர் சரத்குமார் தற்போது பா.ஜ.க வில் இருந்து வருகிறார். இன்று தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ‘அகில இந்திய சரத்குமார் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள், நாட்டாமை குடும்பத்தினர், சுப்ரீம் ஸ்டார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள கீதம் ஹாலில் ஆலோசனை நடத்தப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க வில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் போதுமான முக்கியத்துவம் இல்லாததால் சரத்குமார் அதிருப்தியில் இருப்பதாகவும் இந்நிலையில், தனது ஆதரவாளர்களுடன் இன்று அவர் ஆலோசித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்: