புரட்சி அ.தி.மு.க என்ற புதிய கட்சியைத் தொடங்கிய புகழேந்தி !!!
புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை பெங்களூரு புகழேந்தி இன்று(மார்ச் 4) தொடங்கினார்.
சசிகலாவின் ஆதரவாளராக இருந்த புகழேந்தி, பின்னர் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவில் புகழேந்தி இருந்து வந்தார்.
அண்மையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தி.மு.க வில் இணைந்த நிலையில், பெங்களூரு புகழேந்தி புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ளார்.
முன்னதாக, ராமநாதபுரத்தில் நடந்த மாநாட்டில் புதிய கட்சியை சசிகலா தொடங்கினார். அவர், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுடன் கூடிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
அதேபோல, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்.ஜி.ஆர் அ.தி.மு.க' என்ற புதிய கட்சியை பிப். 19ல் தொடங்கினார்.
ம.தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, ‘திராவிட வெற்றிக் கழகம் (தி.வெ.க)’ என்ற புதிய கட்சியை கடந்த நவம்பரில் தொடங்கினார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்த பெங்களூரு புகழேந்தி புதிய கட்சியை இன்று தொடங்கினார்.

0 கருத்துகள்: