புதன், 4 மார்ச், 2026

கேரளாவிற்கு 1000 லோடு கடத்தத் திட்டமா ? : டாஸ்மாக் கிளப் விவகாரத்திலும் அமைச்சரின் தலையீடு எனப் புகார் !!!

SHARE
பினாமி பெயரில் கனிம வளக் கொள்ளை : பொள்ளாச்சி எம்.எல்.ஏ ஜெயராமன் அதிரடி குற்றச்சாட்டு - கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு !!!

விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் அமைச்சர் வற்புறுத்தல் காரணமாக ஏலத்தை நடத்தி உள்ளனர் - பொள்ளாச்சி ஜெயராமணி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு !!!

விஜய் அ.தி.மு.க வாக்குகளை பிரிப்பாரா ? என்ற யூகத்திற்கு பதில் கூற முடியாது அ.தி.மு.க மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியில் அமரும் - பொள்ளாச்சி ஜெயராமலி எம்.எல்.ஏ நம்பிக்கை !!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரி மற்றும் FL2 புதிய மதுபான கடை அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எம்.எல்.ஏ பொள்ளாச்சி ஜெயராமன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும் போது :
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் கடைசி நேரத்தில் தி.மு.க சர்க்கார் தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் தான் இருக்கிறது. கனிம வள கொள்ளைக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும், மாவட்ட நிர்வாகத்தை பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் பொது மக்களுடைய கருத்துக்களுக்கு எதிர்ப்பாக அனுமதி லைசன்ஸ் வழங்குவதற்கு முயற்சி செய்வதாகவும், முதலாவது மண்ணூர் கிராமத்தில் நேற்றைய தினம் அரசு கல் குவாரியை ஆன்லைன் ஏலம் என்கின்ற பெயரில் எந்த தொழில் செய்கின்றவர்களையும், பங்கேற்க கூடாது என்றும், குறிப்பிட்ட நபர்களுக்கு தான் கொடுக்க வேண்டும் என்று ஒரு அமைச்சரின் வற்புறுத்தலின் பெயரால் நேற்று ஆன்லைன் டெண்டர் நடந்து உள்ளதாகவும், அதை முன் கூட்டியே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், நடத்தக் கூடாது என்றும், சுற்று வட்டார கல்குவாரியில் சுற்றி இருக்கக் கூடிய 10 விவசாயிகள் ஆட்சேபனை தெரிவித்து ரெஜிஸ்டர் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், அதற்கும் தாண்டி அமைச்சர் உடைய வற்புறுத்தலின் காரணமாக ஏலம் நடந்து உள்ளதாகவும் குற்றம் சாட்டியவர், அதேபோல் கேரளா மாநில எல்லை மண்ணூர், மற்றொன்று புளிய பாளையம் கிராமம் அதுவும் கேரள மாநில எல்லையில் ஒரு அமைச்சர் தமிழக அரசு அமைத்த 100 ஏக்கர் நிலம் வாங்கி கன்னியம்மன் என்டர்பிரைசஸ் என்ற பினாமி பெயரில் ஊர் விவசாயிகள், ஊர் மக்கள் அனைவரும் கிராம சபை கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவித்த பிறகு அதையும் தாண்டி அந்த 20 ஏக்கர் நிலத்திற்கு இப்பொழுது ஒப்பந்தம் கொடுப்பதற்கு முழுமூச்சாக தனியார் கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுப்பதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பணி நடைபெற்றுக் கொண்டு உள்ளதாக தெரிவித்தவர், இவர் நண்பருக்கும் ஆட்சேபனை தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு தருவதற்கு வந்து உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் பொள்ளாச்சி நகரத்தில் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மிக அருகாமையில் ஏற்கனவே இரண்டு டாஸ்மார்க் கடைகள் உள்ளதாகவும், மூன்றாவதாக இரண்டுக்கும் நடுவில் FL2 சில்வர் டெக்கரேஷன் கிளப் என்ற பெயரில் ஒன்றைக் கொண்டு வந்ததற்கு மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆவணங்கள் வந்து உள்ளதாகவும், அதையும் அந்த இடத்திற்கு கொண்டு வந்தால் பள்ளி குழந்தைகள், நகராட்சி அலுவலகத்திற்கு இடையூறாக அமையும் என்றும் போக்குவரத்திற்கு இடையூறாக அமையும் என்றும் கூறி உள்ளதாகவும் அதையும் தரக் கூடாது என்று ஆட்சேபனை செய்ய வேண்டும் என்று கூறி உள்ளதாக தெரிவித்தார்.

இதனை மந்திரி உடைய பினாமி இதில் முழுமூச்சாக ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்தவர், உங்களுக்கு எல்லாம் தெரிந்த துறை மந்திரி தான் அதில் முக்கியமாக சாலை போக்குவரத்துடன் தொடர்புடைய மந்திரி என்றும், 100 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளதாகவும் அதில் 20 ஏக்கருக்கு மட்டும் தனியார் குவாரிக்கு கேரளாவிற்கு தினமும் ஆயிரம் லோடு கொண்டு செல்வதற்கு திட்டம் வைத்து உள்ளதாகவும், நேற்று அரசு கல்குவாரி அதை வேண்டாம் என்று சுற்று வட்டார விவசாயிகள் கூறியும், மாவட்ட ஆட்சியருக்கு தனித் தனியாக ரெஜிஸ்டர் தபால் அனுப்பி உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்ததாகவும் இதற்கு மேல் இந்தப் பணியில் ஈடுபட்டு அவர்களாக குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தால் மக்களை திரட்டி போராடுவோம் என்றும், நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று தெரிவித்தார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி மட்டுமல்ல கொங்கு மண்டலமே 21 சட்டமன்ற தொகுதிகள் எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின் பேரில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று கூறியவர், அதுமட்டுமின்றி தமிழக முழுவதும் 210 தொகுதிகளில் எடப்பாடி யார் பெரும்பான்மையாக வெற்றி பெற்று அனைத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனி பெரும் கட்சியாக ஆட்சி அமைக்கும் என்றார்.

நடிகர் விஜய் அ.தி.மு.க வாக்குகளை பிரிப்பார் என்ற கேள்விக்கு

இதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் சொல்லக் கூடிய செய்திகள் அண்ணா.தி.மு.க மிகப் பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி கட்டிலிலே அமர்ந்து மக்களுக்கு நன்மை செய்யும் என்றார்.

தி.மு.க - காங்கிரஸ் பேச்சுவார்த்தை இழுபறி குறித்த கேள்விக்கு

அதை அவர்களிடம் தான் கேட்கணும் என்று கூறினார்.
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: