கோவை மருதமலை கோவிலுக்குள் நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை : அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய ஒத்துழைக்க வேண்டும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு !!!
கோவை மருதமலை சுப்பிரமணியசாமி திருக்கோவிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
முருகனின் ஏழாம் படை வீடு என பக்தர்களால் போற்றப்படும் கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோவிலில் வருகிற 10.3.2026 நாளை முதல் ராஜகோபுரம் நுழைவாயிலில் இருந்து ஆதிமூலவர் சன்னதி, சுப்பிரமணியசாமி சன்னதி, பாம்பாட்டிச் சித்தர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளுக்கு மற்றும் திருக்கோவில் வளாகத்திற்குள் கைப்பேசி செல்போன் பேசவும் புகைப்படம் எடுக்கவும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பக்தர்கள் ராஜகோபுரம் நுழைவாயிலில் நுழைவதற்கு முன் தங்களது கைபேசியினை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அனைவரும் அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்ய ஒத்துழைப்பு நல்குமாறு கோவில் நிர்வாகத்தினர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.


0 கருத்துகள்: