குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் !!!
அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சர்வதேச மகளிர் நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள். கல்வி அறிவு பெற்ற மற்றும் முன்னேற்றம் அடைந்த பெண்களே முன்னேற்றத்தை நோக்கியதொரு நாட்டின் தூண்களாவர். பெண் சக்தி தொடர்ந்து பல்வேறு பிரிவுகளில் துணிச்சலுடன் திறம்பட ஜொலிக்கிறது. இது, செழிப்பான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகத்துக்கான அடித்தளத்தை பலப்படுத்துவதாக அமைகிறது.
இத்தருணத்தில், ஒவ்வொரு பெண்ணும் சம வாய்ப்புகளுடன் வளர்ச்சி பெறவும் மாண்புடனும் பாதுகாப்புடனும் சுதந்திரமாகவும் வாழவும் ஒரு சமுதாயத்தைக் கட்டமைக்க நமது ஒருங்கிணைந்த கடமையை மீண்டும் உறுதியேற்றுக் கொள்வோம்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: