ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை : டிரம்ப் !!!
ஈரானில் அண்மையில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் பலியான சம்பவத்துக்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளக்கம் அளித்தார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் தாக்குதலைத் தொடங்கிய முதல் நாளான கடந்த பிப்ரவரி 28, தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை டிரம்ப் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளார்.
இந்தத் தாக்குதல் நடைபெற்ற ஒரு வாரத்துக்குப் பின், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து டிரம்ப் பேசும்போது, “
அந்தத் தாக்குதல் ஈரானால் நடத்தப்பட்டது. இப்படிச் சொல்ல காரணமும் உள்ளது. ஏனெனில், ஈரான் துல்லியமாக இலக்குகளைக் குறி வைத்து தாக்குபவர்கள் அல்ல. ஆகவே, ஈரானே அந்தத் தாக்குதலை நடத்தி இருக்கிறது” என்றார்.
இதன் இடையே, இந்தத் தாக்குதல் குறித்து பாரபட்சமற்ற மற்றும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

0 கருத்துகள்: