தி.மு.க வுக்கு 'விசில்' அடித்து 'நோ' சொன்ன சிறுவர்கள் : கோவையில் தமிழக வெற்றிக் கழகம் கெத்து !!!
கோவை, ராமநாதபுரம் பகுதியில் தேர்தல் களம் இன்று 'காமெடி கலந்த அதிரடி' காட்சிகளுக்குச் சாட்சியாக அமைந்தது. "போடுங்கம்மா ஓட்டு உதயசூரியனைப் பார்த்து" என ஆளுங்கட்சியின் பாரம்பரிய கோஷங்களுடன் தி.மு.க வினர் அந்தப் பகுதியில் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அலுவலகத்தில் இருந்த சிறுவர்கள், திடீரென ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து தி.மு.க வினருக்கு 'ஷாக்' கொடுத்தனர். தங்கள் கைகளில் இருந்த விசில்களைக் கொண்டு காது கிழியும் அளவிற்கு சத்தமிட்ட அந்தச் சிறுவர்கள், "டி.வி.கே கெத்து... தளபதிதான் கெத்து" என கூச்சலிட்டனர். இந்த எதிர்பாராத 'கவுண்டர் அட்டாக்'கால் வாக்குச் சேகரிக்க வந்த தி.மு.க வினர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
சிறுவர்களின் இந்த அதிரடி ரகளையாலும், விடாமல் அடித்த விசிலாலும் தி.மு.க வினர் தங்களது பிரசாரத்தைத் தொடர முடியாமல் அங்கிருந்து வேகமாக நகர வேண்டிய சூழல் உருவானது.
"வாக்குச் சேகரிக்க வந்தவர்களை ஓடவிட்ட சிறுவர்கள்" என்ற தலைப்பில் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் 'டாப் டிரெண்டிங்' ஆகி வருகிறது. அரசியல் களத்தில் பெரும் புள்ளிகளே மோதிக் கொள்ளும் வேளையில், சிறுவர்களின் இந்த 'க்யூட்' ஆன எதிர்ப்பு, ராமநாதபுரம் ஏரியாவில் பெரும் 'சுவாரசிய' அலைகளை உருவாக்கியுள்ளது. த.வெ.க-வின் இளைஞர் பட்டாளம் தற்போதே களத்தில் எவ்வளவு தீவிரமாக இருக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு 'லைவ் எக்ஸாம்பிள்' என அரசியல் ஆர்வலர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

0 கருத்துகள்: