தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: நாகர்கோவிலில் பிரதமர் மோடி ரோடு ஷோ !!!
சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தி.மு.க, அதிமுக, நா.த.க, தவெக போன்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வரிசையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நாகர்கோவிலுக்கு நேற்று வருகை தந்து உள்ளார்.
இதற்காக, டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் விமான மூலம் கேரளம் மாநிலம் திருவனந்தபுரத்திற்கு வந்து, அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஏர்காம்ப் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தடைந்தார். பின்னர், வேப்பமூடு பகுதியில் இருந்து பிரதமர் மோடியின் ரோடு ஷோ ஆரம்பமாகிறது. தொடர்ந்து, நாகர்கோவில் மாநகரின் முக்கிய சாலைகளான செட்டிக்குளம், வேப்பமூடு சந்திப்பு, மணிமேடை சந்திப்பு, வடசேரி வரை தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, நாகர்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஏர்காம்ப் முதல் வடசேரி வரை உள்ள பகுதியிலும் பலத்த பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்து.


0 கருத்துகள்: