கோவையில் அதிர்ச்சி : மெடிக்கல் ஷாப்பில் ஊசி செலுத்திய உரிமையாளர் - வைரல் வீடியோ !!!
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் தகுந்த மருத்துவப் படிப்பு அல்லது உரிமம் இன்றி, நோயாளிக்கு மருந்துக்கடை உரிமையாளரே நேரடியாக ஊசி செலுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் 'ராம்ஸ்' (Ram's Medicals) என்ற பெயரில் மருந்துக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதிக்குக் காய்ச்சல் மற்றும் உடல்நலக் குறைபாட்டிற்காக வரும் பொதுமக்களுக்கு, அந்த மெடிக்கல் ஷாப் உரிமையாளரே மருத்துவர் போலப் பரிசோதனை செய்வதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான வீடியோவில், அந்த உரிமையாளர் நோயாளி ஒருவருக்கு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) ஏதுமின்றி, அவரே நேரடியாக ஊசி செலுத்தும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
காய்ச்சல் போன்ற நோய்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை அளிக்காமல், மருந்தகங்களிலேயே ஊசி செலுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்,
மருந்துக் கடைகளில் மருந்துகளை விற்பனை செய்ய மட்டுமே அனுமதி உள்ள நிலையில், ஊசி செலுத்துவது மற்றும் மருத்துவச் சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றமாகும். "உயிரைக் காக்க வேண்டிய மருந்தகமே இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஷாப் உரிமையாளர் மீது மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உடனடியாக ஆய்வு நடத்தி, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மருந்து கடையில் நோயாளிக்கு ஊசி செலுத்தும் வீடியோ வெளியாகிய சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: