சிறுபான்மையினர் என்று சொன்னால் செருப்பால் அடியுங்கள்!" - செல்வபுரத்தில் சீமான் ஆவேசப் பேச்சு !!!
புதிய பொருளாதாரக் கொள்கை: சாராயத்திற்கு பதில் கழுதைப் பால் - வித்தியாசமான பார்வையில் சீமான் !!!
அதிக கூட்டணி வைத்து போட்டியிடுகிறார் நடிகர் விஜய் - விமர்சனம் செய்த சீமான் !!!
கோவை செல்வபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆற்றிய அனல் பறக்கும் உரை..
அரசியல் மாற்றம்: சொல்லல்ல செயல்!
சீமான் தனது உரையில், தற்போதைய தேர்தல் களம் பணநாயகம் மற்றும் இலவசங்களால் சூழப்பட்டு இருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
கோடிகளை கொட்டாமல், உயர்ந்த கொள்கைகளை முன்னிறுத்தி எளிய மக்களின் புரட்சியாக இந்தத் தேர்தலை எதிர்கொள்வதாகக் கூறினார்.
திராவிட அரசியல் விமர்சம்:
"சிங்கத்தின் குகையில் நரிகளுக்கு இடம் கொடுத்ததால் தமிழர்கள் உரிமையை இழந்தோம்" எனத் திராவிடக் கட்சிகளைச் சாடினார். இலவசங்கள் மற்றும் ஊழல் குறித்த சாடல்
அரசு வழங்கும் இலவசங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணமே தவிர, ஆட்சியாளர்களின் சொந்தப் பணம் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார்.
முதலீடு அரசியல்:
"ஒரு வேட்பாளர் 30 கோடி ரூபாய் தேர்தலுக்கு முதலீடு செய்கிறார் என்றால், அவர் 300 கோடி லாபம் ஈட்டவே முனைவார். அங்கு சேவை என்ற சொல்லுக்கு இடமில்லை" என்றார்.
பொருளாதாரச் சீரழிவு:
இலவசங்களால் அரசுக்குக் கடன் சுமை கூடி, எதிர்காலத்தில் இலங்கை மற்றும் நேபாளம் போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என எச்சரித்தார்.
நடிகர் விஜய் மீதான விமர்சனம்
புதிதாகக் கட்சி ஆரம்பித்து உள்ள தம்பி விஜயைக் கடுமையாக விமர்சித்தார் சீமான்.
"விஜய் யாரிடமும் கூட்டணி இல்லை என்கிறார். ஆனால், சீட்டு கிடைக்காத 150 பேரை இரவோடு இரவாகத் திரட்டி வேட்பாளராக்கி உள்ளார். இவர் தான் உண்மையில் அதிக கட்சிகளுடன் கூட்டணி வைத்து உள்ளார்" என விமர்சித்தார்.
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி தனித்து நின்று மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் எனப் பெருமிதம் கொண்டார்.
வாக்கு வங்கி வளர்ச்சி:
2014: 4.5 லட்சம் வாக்குகள்
2016: 17 லட்சம் வாக்குகள்
2021: 30 லட்சம் வாக்குகள்
தற்போது 36 லட்சம் வாக்குகளுடன் இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக உயர்ந்து உள்ளதாகக் குறிப்பிட்டார்.
எதிர்காலத் திட்டம்:
கல்வி, மருத்துவம், நீர் அதிகாரத்திற்கு வந்தால் எவற்றைக் கட்டணமில்லாமல் வழங்குவோம் என்பதைப் பட்டியலிட்டார்.
உலகத்தர கல்வி, தனியார் பள்ளிக் கட்டண முறையை ஒழித்து, அனைவருக்கும் சமமான தரமான கல்வி.
மருத்துவம் மற்றும் தூய நீர், இவை மூன்றும் எவ்விதக் கட்டணமுமின்றி மக்களுக்குச் சேரும்.
இயற்கை எரிவாயு
சாணத்தில் இருந்து எரிவாயு உற்பத்தி செய்து, இலவசமாக அல்லாமல் உற்பத்திச் செலவில் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
புதிய பொருளாதாரக் கொள்கை: கழுதைப் பால் வித்தியாசமான பார்வை...
விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் அரசுப் பணியாக்குவேன் என உறுதி அளித்தார்.
"உலகிலேயே அதிக விலை விற்கப்படுவது கழுதைப் பால் (லிட்டர் ₹5,000). அதன் மருத்துவக் குணமும், அழகு சாதனப் பயன்பாடும் அதிகம். இதை வளர்ப்பதன் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்" என்றார்.
சாராய அரசியல்: தாலியை அறுக்கும் சாராயக் கடைகளை மூடிவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் விவசாயத்தைப் போற்றுவோம் என்றார்.
வடமாநிலத்தவர் ஊடுருவல் எச்சரிக்கை
"இன்னும் 5 ஆண்டுகளில் வடமாநிலத்தவர் உங்களை அடித்து விரட்டுவார்கள். நிலத்தை இழந்தால் பலத்தை இழந்து விடுவாய்" என எச்சரித்த சீமான், தமிழர்கள் தங்களது வரலாற்றையும், மொழியையும் தற்காத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
"திரையில் தலைவனைத் தேடாமல், தரையில் உங்களோடு நிற்பவன் யார் என்று பாருங்கள்" எனக் கூறி, ஏப்ரல் 23-ல் நடைபெற உள்ள தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

0 கருத்துகள்: