அமலாக்கத்துறை தொடுத்த பொய் வழக்கில் நீதி வென்று உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி !!!
அமலாக்கத்துறை தொடுத்த பொய் வழக்கில் நீதி வென்று உள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இதற்கு இடையே ஓய்வு எடுத்து வரும் முதல்வரை முக்கிய புள்ளிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் என பலரும் சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் தி.மு.க துணைப் பொது செயலாளரும், அமைச்சருமான ஐ.பெரியசாமி, அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் முதல்வரை நேரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது.
சந்திப்புக்கு பிறகு அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது, "அமலாக்கத்துறை தொடுத்த பொய் வழக்கில் நீதி வென்று உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க வுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ஸ்டாலின் முதல்வராவார்" என்றார்.
முன்னதாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: