திங்கள், 27 ஏப்ரல், 2026

ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு; சமூக வலைதளத்தில் ஆவேச பதிவு !!!

SHARE

 ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்பு; சமூக வலைதளத்தில் ஆவேச பதிவு !!!

குடும்பத்துடன் உணவகத்திற்கு சென்று இருந்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'சுப்பிரமணியபுரம்' திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜேம்ஸ் வசந்தன். அதற்கு முன்பு சில தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அவர் இருந்து வந்தார்.

சுப்பிரமணியபுரம்' வெற்றிக்கு பிறகு ஜேம்ஸ் வசந்தனுக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது முழு நேர இசைமைப்பாளராக அவர் பணி புரிந்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, விஜய்யின் அரசியல் வருகையை ஆரம்பத்தில் இருந்தே ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்து வருகிறார். அண்மையில் கூட, .த.வெ.க வினர் மற்றும் விஜய் ரசிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதில், விஜய்யையும், அவரது அரசியல் நிலைப்பாட்டையும் ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக சாடி பேசி இருக்கிறார். இதனால் த.வெ.க தொண்டர்கள் அவரை மோசமாக பேசி கமெண்ட் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான், தனது குடும்பத்துடன் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு உணவகத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் சென்று இருக்கிறார்.

அங்கு உணவு அருந்தி விட்டு வெளியே வந்த அவர் காரை எடுப்பதற்காக பார்க்கிங் பகுதிக்கு வந்து உள்ளார். அப்போது தனது காரின் பின்பக்க இருக்கையின் அருகே உள்ள ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஜேம்ஸ் வசந்தன் புகார் அளித்து உள்ளார். இதன் பேரில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார், உணவகத்தை சுற்றி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதன் இடையே, தனது கார் கண்ணாடி உடைக்கப்பட்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து உள்ள அவர், அதற்கு கீழே காட்டமான பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

அதில், "தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை. இன்று மதியம் ஒரு உணவகத்திற்கு சாப்பிட சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது" என ஜேம்ஸ் வசந்தன் தனது பதிவில் கூறி உள்ளார்.

முன்னதாக, த.வெ.க தொண்டர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் விஜய்யை கடுமையாக விமர்சித்து இருப்பார் ஜேம்ஸ் வசந்தன். த.வெ.க தூய சக்தி என விஜய் கூறியதை விமர்சிக்கும் விதமாக, அவர் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லையா? வருமான வரியை ஒழுங்காக செலுத்தியவரா? இவர் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்ய மாட்டாரா? என ஜேம்ஸ் வசந்தன் கேள்வியெழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: