வியாழன், 2 ஏப்ரல், 2026

சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை : அண்ணாமலை அதிரடி முடிவு - அன்பு கூட்டத்தினர் அதிர்ச்சி !!!

SHARE

 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை : அண்ணாமலை அதிரடி முடிவு - அன்பு கூட்டத்தினர் அதிர்ச்சி !!!

இந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று பாரதிய ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடு பிடித்து உள்ளது. 4 முனை போட்டி ஏற்பட்டு உள்ள நிலையில் தி.மு.க, அ.தி.மு.க உட்பட பல்வேறு கட்சி வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறக்கி உள்ளன.

ஆனால் தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் இன்னும் தங்கள் கட்சியை சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கின்றன.

பாரதிய ஜனதா அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. 27 தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்கள் யார் ? என்பதை அறிவிப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் மத்திய மந்திரி பியூஸ் கோயல் தமிழகம் வந்து பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தியும், இதுவரை வேட்பாளர் பட்டியல் வெளியாகப்படவில்லை.

இது தொடர்பாக நேற்று முன்தினம் தமிழக பாரதிய ஜனதா மாநில அலுவலகத்தில் நடைபெற்ற மையக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, ஒரு தொகுதிக்கு மூன்று பேர் என தேர்வு செய்யப்பட்டு அந்த பட்டியல் பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார்.

அந்த வகையில் பாரதிய ஜனதா வேட்பாளர் பட்டியலை எந்த நேரத்திலும் கட்சி தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அந்த வேட்பாளர் பட்டியல் பாரதிய ஜனதா முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயர் இருக்கிறதா ? அவர் எந்த தொகுதியில் போட்டியிட இருக்கிறார் ? என்ற எதிர்பார்ப்பும் பாரதிய ஜனதா தொண்டர்கள் மத்தியில் இருந்து வருகிறது. 

கட்சி மேலிடம் அவரை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகவும், ஆனால் அவர் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்ற முடிவு செய்து உள்ளதாக பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.


மேலும் அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் ஆதரித்து தீவிரப் பிரச்சாரம் செய்வேன் என கட்சி மேல் இடத்தில் தெரிவித்து விட்டதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.


அண்ணாமலை இந்த அதிரடி முடிவால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: