கோவையில் '8,000 ரூபாய் டோக்கன்' விவகாரம் : தி.மு.க நிர்வாகிகளைக் கையும் களவுமாகப் பிடித்த அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி !!!
தொண்டாமுத்தூர் மற்றும் துடியலூரில் பரபரப்பு: மோசடி கும்பல் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு !!!
கோவையில் பல்வேறு இடங்களில் திமுகவினர் கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் வழங்குவதை தேசிய ஜனநாயக கூட்டணி கட்டி நிர்வாகிகள் கையும் களவுமாக பிடித்து பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவை மாவட்டத்தில் தி.மு.க வினர் தேர்தல் ஆணையம் போலி டோக்கன்களை மக்களிடம் வினியோகித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பிறகும், கோவை, தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி தென்னம்மநல்லூர் பகுதியை சேர்ந்த தி.மு.க பொருப்பாளர் பூவாத்தாள் என்பவர் வாக்காளர்களுக்கு கள்ளத்தனமாக 8 ஆயிரம் ரூபாய்கான டோக்கன்களை வினியோகித்து மோசடியில் ஈடுபட்டனர். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அப்பெண்ணை கையும், களவுமாக பிடித்து தேர்தல் பரக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அதுபோல் கோவை வடக்கு மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் தொகுதி துடியலூர் பகுதியில் தி.மு.க மோசடி கும்பல்கள் போலி டோக்கன் கொடுத்து மக்களை ஏமாற்றுவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் அந்த கும்பலை பிடித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் உடனடியாக இந்த மோசடி கும்பல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்: