புதன், 25 பிப்ரவரி, 2026

ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை : குமரியில் வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு - முதல்வர் மு க ஸ்டாலின் !!!

SHARE

 ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை : குமரியில் வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு - முதல்வர் மு க ஸ்டாலின் !!!

கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை அருகே ரூ. 1.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயிலை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக அவர் கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரம் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் புதிதாக கட்டப்பட்டு உள்ள 90 வீடுகளை திறந்து வைத்து அங்கு உள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சிகளுக்கு பின்னர் முதல்வர் அரசு விருந்தினர் மாளிகைக்கு ஓய்வெடுக்க சென்றார்.

இன்று மாலை கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் வழியில் புத்தளம் கல்லடி விளையில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி சிலை மற்றும் ஸ்டாலின் படிப்பகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு சர்.சி.பி. ராமசாமி அய்யர் பூங்காவில் ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு உள்ள பொன்னப்ப நாடார் சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

இரவு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், நாளை (புதன்கிழமை) கன்கார்டியா பள்ளி திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். காலை 10.30 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: