மறைந்த காவலர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி காசோலை : அரசு காப்பீடு திட்டத்தின் இழப்பீடு - கோவை மாநகர காவல் ஆணையர் வழங்கினார் !!!
கோவை, மாநகர ஆயுதப்படையில் தலைமை காவலராகப் பணியாற்றி வந்த சரவணன் கடந்த 21/4/2025 அன்று உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் எதிர்பாராத விதமாகத் தண்ணீரில் மூழ்கி அவர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாடு அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுடன் அரசு ஊழியர்களுக்கான இன்ஷூரன்ஸ் இணை free of cost இல் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி பணியில் இருக்கும் போது விபத்தில் இறந்தால் ஒரு கோடிக்கான தொகையினை சம்பந்தப்பட்ட வங்கியின் இன்சூரன்ஸ் மூலம் கொடுக்கப்படும்.
இந்நிலையில் அந்த இன்சூரன்ஸ் தொகையை அந்த வங்கியின் மூலம் வழங்கப்பட்ட ரூ. 1 கோடிக்கான காசோலையை, கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் முன்னிலையில் மறைந்த சரவணனின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நெகிழ்ச்சியான நிகழ்வின் போது, அரசு ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய தமிழக அரசுக்குக் காவலர் குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
விபத்து காலங்களில் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தற்போது ஒரு காவலர் குடும்பத்திற்குப் பெரும் பக்க பலமாக அமைந்து உள்ளது. காவல் ஆணையர் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வு, மற்ற அரசு ஊழியர்கள் இடையே இத்திட்டம் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: